பதைபதைக்க வைக்கும் வீடியோ! "2 குழந்தைகள்!" மறுநொடி 10வது மாடியில் இருந்து பொத்துனு விழுந்த லிஃப்ட்

Subscribe to Oneindia Tamil

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் லிஃப்ட் விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் பதைபதைப்பைக் கொடுப்பதாகவே இருக்கிறது.

இப்போது எங்குப் பார்த்தாலும் வானுயர்ந்த கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. நகரங்களில் அதிகரிக்கும் ஜனநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 Two Kids narrowly Escape as Elevator Falls in Pune building

நகரத்தில் மக்கள்தொகை அதிகரிக்கும் நிலையில், வானுயர்ந்த கட்டிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. பெருநகரங்களில் சென்றால் இதுபோல நாம் பல அடுக்குமாடி கட்டிடங்களைப் பார்க்கலாம்.

லிஃப்ட்கள்: இவை பொதுவாக 20, 30 மாடிகள் உயரம் கொண்டதாக இருக்கும். மேல் மாடிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் லிஃப்ட்களையே பயன்படுத்துவார்கள். பெயருக்குப் படிக்கட்டுகள் இருந்தாலும் கூட லிஃப்ட்கள் தான் இவர்களின் தேர்வாக இருக்கும். லிஃப்ட் இல்லாமல் அத்தனை மாடி ஏறுவது குறித்தெல்லாம் யோசிக்கக் கூட முடியாது. இதன் காரணமாக இதுபோன்ற கட்டிடங்களில் லிஃப்ட் ரொம்பவே முக்கியமானதாக மாறுகிறது.

அதேநேரம் லிஃப்ட்டை முறையாகப் பராமரிக்க வேண்டியது ரொம்பவே அவசியம். முறையான பராமரிப்பு இல்லை என்றால் மோசமான விபத்துகளும் ஏற்படும். இதற்கிடையே லிப்ட்களால் எந்தளவுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது

 Two Kids narrowly Escape as Elevator Falls in Pune building

லிப்ட் விபத்து: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. அங்கே புனேவின் பவ்தான் என்ற பகுதியில் உள்ள கட்டிடத்தில் 10ஆவது மாடியில் இருந்து லிஃப்ட் விழுந்துள்ளது. இதில் அதியசம் என்னவென்றால் அத்தனை நேரம் உள்ளே இரு சிறுவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் வெளியே வந்த மறுநொடி இந்த விபத்து நடந்துள்ளது. இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. லிப்ட் கம்பி அறுந்ததால் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், முறையாக லிப்ட் பராமரிக்கவில்லை என்று கூறி லிஃப்ட் பராமரிக்கும் ஒப்பந்தம் எடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

10ஆவது மாடியில் இருந்து விபத்து: அதில் பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் சேர்ந்து, அங்கு லிஃப்டில் ஏறியுள்ளார். அவர்கள் 10ஆவது மாடியில் லிஃப்டில் இருந்து கீழே இறங்கிய மறுநொடி மேலே இருந்து லிஃப்ட் அப்படியே சரிந்துள்ளது. இது தொடர்பான 46 நொடிகள் ஓடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் நிச்சயம் ஒரு வித பதற்றத்தைத் தருவதாகவே இருக்கிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதற்கு யார் காரணம் பராமரிப்பு பணிகளில் அலட்சியம் காட்டியது யார் என்பது குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அங்குள்ள சாய் வேலாசிட்டி சொசைட்டி என்ற கட்டிடத்தில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு லிஃப்ட்களை பராமரிக்கும் பொறுப்பானது பில்டருக்கே இருக்கும் நிலையில், அவர் அதில் அலட்சியம் காட்டியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அங்குள்ள வீட்டின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பில்டர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+