ஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி!
கணவனை 11 முறை வெட்டி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்
புனே: கட்டின கணவரை 11 முறை வெட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் மனைவி.. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்படுத்தி உள்ளது.
நல்லசோப்ரா பகுதியில் வசித்து வரும் தம்பதி சுனில் கதம் - ப்ரனாலி. ஒருத்தருக்கொருத்தர் உயிருக்குயிராக காதலித்தவர்கள்.. கடந்த 2011ம் வருஷம் கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். ப்ரனாலிக்கு 33 வயதாகிறது.

ஆனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டையும் தகராறும் நடந்து கொண்டே இருந்தது. நேற்று விடிகாலை 5 மணிக்கு கூட இவர்கள் இருவருக்கும் பயங்கரமான சண்டை வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தண்ணீர் கொண்டு வருகிறேன் என்று சொல்லி, விருட்டென கிச்சனுக்குள் நுழைந்தார். அங்கே காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து கணவரை சரமாரியாக வெட்டினார். தொடர்ச்சியாக கத்தியால் 11 முறை கணவரை வெட்டினார். அப்பவும் ஆவேசம் அடங்கவில்லை.. அதனால் இறுக்க பிடித்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார்.
பிறகு, மாமனார், மாமியாரிடம் கணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மருமகள் பேச்சை நம்பவே இல்லை. அதனால் மகனின் கொலையில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் சொன்னார்கள்.
இதையடுத்து, சுனிலின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதுதான் மனைவியின் குட்டு வெளிப்பட்டது. இதையடுத்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கணவனை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications