புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதன்முறையாக.. ஒரு பெண் போலீஸ் ஆணாக மாற போகிறாராம்.. ஆபரேஷனுக்கு அனுமதி.. எங்கேன்னு பாருங்க

பெண் போலீஸ் ஆணாக மாறும் ஆபரேஷனுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

புனே: பெண் கான்ஸ்டபிள் ஒருவருக்கு, ஆணாக மாறுவதற்கான ஆபரேஷன் செய்து கொள்வதற்கு மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 3 வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. பீட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீசாக இருப்பவர் லலிதா சால்வே.. இவருக்கு 29 வயது..

மும்பை ஜேஜே ஆஸ்பத்திரியில் செய்த பரிசோதனையில் அவரது உடலில் ஆண் தன்மை இருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாற முடிவு செய்தார்.

கிச்சனில் சமைத்து கொண்டிருந்த பெண்.. உள்ளே சென்ற மாமனார்.. அரிவாளால் ஒரே போடு.. அலறிய திருப்பத்தூர்கிச்சனில் சமைத்து கொண்டிருந்த பெண்.. உள்ளே சென்ற மாமனார்.. அரிவாளால் ஒரே போடு.. அலறிய திருப்பத்தூர்

தீர்ப்பாயம்

தீர்ப்பாயம்

ஆனால் அவரது கோரிக்கையை காவல்துறை நிர்வாகம் அப்போது ஏற்க மறுத்தது. இதையடுத்து அவர் கோர்ட்டின் உதவியை நாடினார்.. இது தொடர்பாக மகாராஷ்டிர நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிடுமாறு கோர்ட்டும் அவரை அறிவுறுத்தியது. எனவே, அன்றைய முதல்வர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்த லலிதா சால்வே, ஆணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும், சிகிச்சைக்குப்பின் தொடர்ந்து ஸ்டேஷனில் ஆண் போலீசாக பணியாற்றவும் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்...

ஒப்புதல்

ஒப்புதல்

முதல்வர் ஒப்புதல் அளித்ததையடுத்து, லலிதாவுக்கு மாநில உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது.. உடனே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக விடுப்பில் செல்ல லலிதாவுக்கு அனுமதியும் அளித்தது. மேலும், பாலினமாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.. அதாவது முதல்கட்ட பாலினமாற்று அறுவை சிகிச்சை அப்போது நடந்து முடிந்தது. பிறகு ஆண் கான்ஸ்டபிளாக பணிபுரிய டிஜிபி அனுமதி அளித்திருந்தார். இந்த சம்பவம் 3 வருடத்துக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

இந்நிலையில், ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.. அங்குள்ள பெண் காவலர் ஒருவர், ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அம்மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது... டியூட்டியில் இந்த பெண் கான்ஸ்டபிள் ஈடுபட்டிருந்தபோது, அவரது நடவடிக்கைகள் அச்சு அசலாக சக ஆண் காவலர்கள் போன்றே இருந்துள்ளது.. இதற்கு பிறகு டெஸ்ட் செய்யப்பட்டதில், சிறுவயது முதலே அவர் பாலின அடையாள கோளாறு பாதிப்புக்கு ஆளாகி வந்ததையும் உளவியல் ஆய்வாளர்கள் டெஸ்ட்டில் உறுதி செய்தனர்.

 கான்ஸ்டபிள்

கான்ஸ்டபிள்

இந்நிலையில் ஆணாக மாறும் அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குமாறு கடந்த 2019ம் ஆண்டு காவல்துறை தலைமையகத்திடம் அந்த பெண் கான்ஸ்டபிள், முறைப்படி விண்ணப்பித்திருந்தார். அவரது விருப்பம் அரசிதழில் வெளியான நிலையில் அது தொடர்பான மனுவை மத்திய பிரதேச உள்துறை அமைச்சகத்திற்கு அம்மாநில காவல் தலைமையகமும் பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் பெண் காவலர் ஆணாக அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 முதல் முறை

முதல் முறை

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்று கூடுதல் தலைமை செயலர் ராஜேஷ் ரஜோரா அறிவித்துள்ளார். நமது நாட்டின் சட்டவிதிகளின்படி, ஒரு இந்திய குடிமகன் தனது மதம் மற்றும் சாதியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உண்டு என்பதன் அடிப்படையில் இந்த அனுமதியை மத்திய பிரதேச உள்துறை அமைச்சகம் வழங்கியதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

English summary
Woman constable allowed to undergo gender reassignment surgery in Madhya pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X