ஏன் தாத்தா இப்படி அடம் பிடிக்கிறே.. கட்டுனா சிந்துவைத்தான்.. விடாமல் விரட்டும் 75 வயது மலைச்சாமி
பிவி சிந்துவை மணம் முடிக்க 75 வயது தாத்தா மனு அளித்துள்ளார்
Recommended Video
ராமநாதபுரம்: கட்டினா சிந்துவைதான் கட்டுவேன்னு சொன்ன 75 வயது தாத்தா திரும்பவும் பிவி சிந்துவை கல்யாணம் செய்து வைக்க கலெக்டரிடம் மனு தந்துள்ளார். "எப்படியாவது எனக்கும் சிந்துவுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சிடுங்க" என்று திரும்பவும் கோரிக்கை வைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் விரதக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. 75 வயது தாத்தா இவர். விவசாயம் செய்து வருகிறார்.
இவர் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை ஆனால், கலெக்டர் ஆபீஸ் வந்துவிடுகிறார். தனக்கு இந்த ஒரு வருஷமாக 16 வயசுதான் ஆகிறது என்றும், அதனால், 16 வயது என பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் மனு அளித்து வருகிறார்.

கல்யாணம்
இதைதவிர, கடந்த 16-ம் தேதியும் ஒரு மனுவுடன் கலெக்டர் ஆபீஸ் வந்திருந்தார். "எனக்கு விளையாட்டு மீது ஆர்வம் உள்ளது. அதனால், வீராங்கணை பிவி சிந்துவை எனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும். அவர்தான் எனக்கு பொருத்தமானவர்" என்று அவரது படத்துடன் கூடிய மனுவை ஆட்சியர் கலெக்டர் வீரராகவ ராவிடம் தந்தார். அந்த மனுவை வேறு வழி இல்லாமல் வாங்கிய கலெக்டரும், மலைச்சாமியை திருப்பி அனுப்பி வைத்தார்.

ஏற்பாடு
செய்தியாளர்களிடம் பேசிய மலைச்சாமி, "பிவி சிந்துவை நான் கல்யாணம் செய்யாமல் விடப்போவதில்லை. எனக்கு அவர்தான் சரியான ஜோடி. எங்கிருந்தாலும் அவரை விடப்போவதில்லை. கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாட்டையும் செய்து வருகிறேன். பிவி சிந்துவை தூக்கிட்டு வந்து தாலி கட்டுவேன்" என்று கூறியிருந்தார்.

அம்மா மாதிரி
இப்போது, நேற்றும் கலெக்டர் ஆபீசுக்கு மலைச்சாமி வந்தார். தனக்கு ஏதோ சொத்துப்பிரச்சினை என்று சொல்லி மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியிடம் மனு அளித்தார். அத்துடன் விடாமல், "உங்கள என் அம்மா மாதிரி நினைக்கிறேன், என் சகோதரி மாதிரி நினைக்கறேன். நீங்கதான் எனக்கும் சிந்துவுக்கும் கல்யாணம் செய்து வைக்கணும்" என்றார்.

வீராங்கணை
வாரம் ஆனால், இந்த மலைச்சாமி தொல்லை தாங்க முடியவில்லை என்கிறார்கள் பொதுமக்கள். அதனால் கலெக்டர் ஆபீசில் மலைச்சாமியை பார்த்தாலே எரிச்சலாக வருகிறதாம். "ஒரு சர்வதேச பேட்மிண்டன் வீராங்கணையை அசிங்கப்படுத்துவதை போல மலைச்சாமி நடந்து கொள்கிறார், இவர் மீது ஏன் இன்னும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை, அவருக்கு மனநிலை சரியாகத்தான் உள்ளதா என்பதையும் யாருமே கவனத்தில் கொள்ளவில்லையே" என பொதுமக்கள் ஆதங்கப்பட்டு சொல்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications