Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை பொருளாதார நெருக்கடி - குழந்தைகள் உள்பட மேலும் 8 ஈழத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

Subscribe to Oneindia Tamil

இராமநாதபுரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தாக்குப்பிடிக்க முடியாமல், வாழ்வாதாரத்திற்காக 4 குழந்தைகள் உட்பட 8 தமிழர்கள் அகதிகளாக இன்று தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து, இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    இலங்கை பொருளாதார நெருக்கடி - குழந்தைகள் உள்பட மேலும் 8 ஈழத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

    இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி, உணவு பற்றாக்குறை போன்ற காரணங்களால், பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த விலைவாசி உயர்வால் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அவர்களில் பலர் வாழ வழியின்றி, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ளும் வகையில், தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பலர் குடும்பம் குடும்பமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக படகுகளில் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வருகின்றனர்.

     8 More Sri Lankan refugees including children arrive at Dhanushkodi

    இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் இரண்டரை மாத கைக்குழந்தையுடன் 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 2 குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் ஒரு படகுமூலம் இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டுள்ளனர். இந்தியா- இலங்கை இடையே உள்ள மூன்றாம் மணல் திட்டு பகுதியில், இலங்கை படகோட்டிகள் அவர்களை இறக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

    உணவு குடிநீர் இன்றி நேற்று முழுவதும் மணல் திட்டில் அவர்கள் தவித்து வந்துள்ளனர். தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் அகதிகள் தவித்து வருவதாக கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்று இந்திய கடற்படையினர், 4 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 8 பேர் அகதிகளாக வந்திருப்பதைக் கண்டனர்.

    பின்னர், கோபர் கிராப்ட் கப்பல் மூலம் அவர்களை மண்டபம் பகுதிக்கு கடலோர காவல் படையினர் அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் உளவு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களையும் சேர்த்து இதுவரை இலங்கையில் இருந்து 142 பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+