இலங்கை கடற்படை கைது செய்த 9 தமிழக மீனவர்கள்..இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
ராமநாதபுரம்: மீன் பிடித்தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் இன்று காலையில் கைது செய்தனர். கச்சத்தீவு கடற்பரப்பு அருகே படகு பழுதாகி நின்ற போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை அடித்து நொறுக்குவதும், வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர்.

தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை அளித்த போதிலும், இதுபோன்ற விரும்ப தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.
இதனிடையே மீன்பிடித் தடைக்காலம் முடிந்த உடன் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அந்தோணி என்பவர் தனது விசைப்படகில் 9 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் கப்பல் பழுதாகி கச்சத்தீவு கடற்பரப்பில் படகு தரை தட்டி நின்றுள்ளது.
இந்நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகையும், படகில் இருந்த அந்தோணி, தேசுராஜ், ரூபன் உள்ளிட்ட 9 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
எஞ்சின் பழுது காரணமாக நெடுத்தீவு பகுதியில் கப்பல் தரை தட்டியதால் இலங்கை கடற்படையின் உயர் அதிகாரிகள் அனுமதி அளித்தால் படகையும் மீனவர்களையும் விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications