Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவிபட்டினம் கோவிலில் வினோதம்.. திடீரென கடலில் வெளியில் வந்த அதிசயம்.. பக்தர்கள் பரவசம்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் நவபாஷணம் கோயிலில் திடீரென நடந்த ஒரு சம்பவத்தால் பக்தர்கள் வியப்படைந்தனர். கடலுக்குள் இருந்த நவக்கிரக கற்கள் கடல்நீர் உள்வாங்கியதால் வெளியே தெரிந்தது. இதை பார்த்து பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

கடல் பகுதிகளில் அடிக்கடி கடல் நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் இயல்பான ஒன்று. குறிப்பாக தென்மேற்கு பருவ மழை காலங்களில் இலங்கையை ஒட்டிய தமிழக கடற்பகுதிகளில் கடல் நீர் உள்ளே செல்வது பின்னர் இயல்பு நிலைக்கு வருவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

A miracle in the sea in devipattinam navapashanam temple

அண்மையில் கூட திருச்செந்தூர் கோவில் அருகே கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது. அதுபோல் தேவிபட்டினத்திலும் கடல் நீர் உள்வாங்கியதால் நவக்கிரக கற்கள் வெளியே தெரிந்தன. இதை பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர்.

ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் இருக்கிறது தேவிபட்டினம் கடல் பகுதி. இ்ந்த பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் நவபாஷாண நவக்கிரக கோவில் அமைந்துள்ளது. கடவுள் ராமபிரானால் பூஜை செய்யப்பட்ட இந்த நவக்கிரக கோவில் கடலில் அமைந்துள்ளது.

வடமாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் இருந்து பக்தர்கள் ஆர்வமுடன் தினமும் பரிகார பூஜை செய்வதற்காக வந்து செல்வது வழக்கம். இந்த நவக்கிரக கற்களை பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக கடலுக்குள் பாலம் ஒன்றும் இருக்கிறது . பொதுவாக தேவிபட்டினத்தில் நவகிரக கற்கள் வெளியே தெரியாது. கடலில் மூழ்கிய நிலையிலேயே காணப்படும்.

இந்த நிலையில் தேவிபட்டினம் பகுதியில் வியாழக்கிழமையான நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் திடீரென உள்வாங்கியது. இதனால் நவக்கிரக கோவில் அமைந்துள்ள பகுதியிலும் பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடல் நீரில் மூழ்கிய நிலையில் இருக்கும் நவக்கிரக கற்கள் காலை முதல் மதியம் வரை தெளிவாக வெளியே தெரிந்தன. இதனை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.

தேவி பட்டினம் என்றில்லை. தென்மேற்கு பருவமழை காலங்களில் கடல்நீர் பொதுவாக உள்வாங்குவதும் பின்னர் இயல்பு நிலைக்கு திருப்புவதும் இயல்பான ஒன்றுதான் அப்படித்தான் நேற்று உள்வாங்கிய கடல், மதியத்திற்கு பிறகு இயல்பாக மாறியது. கடல் உள்வாங்கிய போது நவக்கிரக கற்கள் வெளியே தெரிந்தது. தேவிபட்டினத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதியிலும் நேற்று கடல் உள்வாங்கி பின்னர் இயல்பு நிலையை சந்தித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+