ஷாக்.. அரிவாளுடன் விரட்டிய கும்பல்.. புதருக்குள் பதுங்கியவரை இழுத்து போட்டு.. தலையை வெட்டி- கொடூரம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி நாகாச்சி பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தலை துண்டித்து நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்டவரின் உறவினர்கள் உச்சிப்புளி யூனியன் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது.
உச்சிப்புளி அருகே கல்கிணற்றுவலசையை சேர்ந்தவர் ராமு என்பவரின் மகன் தேவா (26). இவருக்கும் உச்சிப்புளி அருகே நாகாச்சியை சேந்தவர் கணேசமூர்த்தி9 24) என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகாச்சி பகுதியில் கணேசமூர்த்தி உறவினர் ஒருவர் மது போதையில் தாக்கியதாகவும் அதை தட்டி கேட்க சென்ற போது கணேசமூர்த்தியை தேவா உள்ளிட்டோர் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கணேசமூர்ததி சமீபத்தில் வீடு திரும்பி உள்ளார்.

சாமி தரிசனம்
இதனால் தேவாவை பழிவாங்க முடிவு செய்த கணேசமூர்த்தி தனது நண்பர்களுடன் இணைந்து திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு தேவா தனது நண்பர் முத்துக்குமார் உடன் நடு வலசை பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

பயங்கர ஆயுதங்கள்
அப்போது கணேசமூர்த்தி கார்த்திக் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்று உள்ளனர். இந்நிலையில் நம்பாயி வலசை அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென தேவாவை கணேசமூர்த்தி தரப்பினர் இடைமறித்து பயங்கர ஆயுதங்கள் கொண்டு விரட்டியுள்ளனர்

தேவா கொலை
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவாவும் அவரது உறவினர் முத்துக்குமாரும் டூவிலரை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். உறவினர் தப்பிச்சென்றுவிட்ட நிலையில், தேவாக தப்பிக்க வழியின்றி புதருக்குள் மறைந்து கொண்டார். அவரை சுற்றி வளைத்த கணேசமூர்த்தி கோஷ்டியினர் வெளியே இழுத்துப் போடு சரமாரியாக வெட்டினர். பின்னர் அவரது தலையை மட்டும் துண்டித்து சென்று தாமரைக்குளம் பகுதியில் போட்டுவிட்டு சென்றனர்.

உறவினர்கள் சாட்சியம்
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த உச்சிப்புளி காவல்துறையினர் தேவாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து தேவாவின் உறவினர் முத்துக்குமார் சாட்சியம் அளித்தார். அதன்பின்னர் தேவாவின் சகோதரர் மூர்த்தி அளித்த புகாரின் பேரில் கொலைச் சம்பவம் குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சாலை மறியல்
இந்த வழக்கில் கணேசமூர்த்தி கார்த்திக் தினேஷ் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வந்தநிலையில் கொலையாளிகள், நேற்று திருப்புவனம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உச்சிபுளி யூனியன் அலுவலகம் முன்பு கொல்லப்பட்ட தேவாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications