ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமதாஸ் ஒரு பொலிட்டிகல் புரோக்கர்.. நான் சொல்லலை.. அம்மாவே சொன்னது.. போட்டுத் தாக்கும் புகழேந்தி

டாக்டர் ராமதாஸ், முக ஸ்டாலின் மீது புகழேந்தி சரமாரி குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

முதுகுளத்தூர்: ராமதாஸ் ஒரு பொலிட்டிகல் புரோக்கர் என்று அம்மாவே அன்னைக்கு சொன்னார். இவர்களுடன் கூட்டணி வைத்து, தோட்டத்தில் விருந்து சாப்பிட்ட அடிமைகளை வன்மையாக கண்டிக்கிறேன் என்று அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வைத்து, அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசினார்.

அப்போது முக ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், தமிழிசை சவுந்தராஜன் என ஒருத்தரையும் விடாமல் சரமாரியாக தாக்கி பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

ஸ்டாலின்

ஸ்டாலின்

ஸ்டாலினை பற்றி பேசும்போது, "சுதந்திர தினம் , குடியரசு தினம் சிறு குழந்தைகள் கூட நினைவில் கொள்ளும். ஆனால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பல முறை தவறுதலாக சொல்லி, எதிர்கட்சி தலைவர் பதவிக்கே தான் தகுதி இல்லாதவன் என்பதை நிரூபித்துள்ளார் . இவர் முதல்வராக தகுதியும் இல்லை. வாய்ப்பும் வராது.

சோபியா

சோபியா

தமிழிசையால் தூத்துக்குடி மாணவி சோபியா பித்து பிடித்தவர் போல் உள்ளார். அந்த பித்தை போக்க வேண்டுமானால், யாரால் பயந்தாரோ அவரே தான் வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான் நான் ஃபிளைட்டில் செல்லும்போது தமிழிசை பயணம் செல்கிறாரா என பட்டியலை பார்த்துவிட்டுதான் செல்வேன். அந்த ஃபிளைட்டில் தமிழிசை செல்வதாக இருந்தால் எனது பயணத்தை ரத்து செய்து விடுவேன்.

பன்னீர்

பன்னீர்

அதிமுகவுக்கும் பாஜகாவுக்கும் என்ன சம்மந்தம்? கட்ட பஞ்சாயத்து செய்ய மோடி யார்? இந்த அடிமைகளை மிரட்டி டெல்லியிலிருந்து ஆட்சி செய்கின்றனர். பழனிச்சாமி பன்னீரை அழைத்து கட்ட பஞ்சாயத்து செய்திருக்கிறாரே.. இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். அன்வர் ராஜா சிறந்த பண்பாளர் என்றுதான் பழகி வந்தேன். பாராளுமன்றத்தில் தலாக் சட்டத் திருத்தத்தை எதிர்த்து பேசினார் என வியந்தேன் இஸ்லாமியர்க்கு எதிரான மோடி கூட்டணியை வரவேற்று அன்வர் ராஜா கீழ்த்தரமான மனிதர் என நிரூபித்து விட்டார்.

ராமதாஸ்

ராமதாஸ்

பாமகவினர் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு போட்டவர்கள். இவர்களுடன் கூட்டணி வைத்து பாமகவினரின் தோட்டத்தில் விருந்து சாப்பிட்ட அடிமைகளை வன்மையாக கண்டிக்கிறேன். ராமதாஸ் ஒரு பொலிட்டிகல் புரோக்கர் என ஜெயலலிதா கூறினார். இங்கே ஒரு அமைச்சர் இருக்கிறார். வேஷ்டி உருவிய அந்த அமைச்சர் கொள்ளையடித்து வைத்துள்ளார் .

இரட்டை இலை

இரட்டை இலை

தற்போது 6 வாரத்தில் தேர்தல் கமிஷசனுக்கு இரட்டை இலை குறித்து தீர்ப்பு வழங்கனும். இல்லையேல் டிடிவிக்கு குக்கர் சின்னம் கொடுக்கனும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலையை முடக்க வாய்ப்பு உள்ளது" என்றார்.

English summary
AMMK Pugazhendhi criticized MK Stalin, Dr Ramadoss, Tamizhisai Soundarajan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X