சுறுசுறுப்பாக நடக்க சுடச்சுட போண்டா.. ஸ்ட்ராங்கா ஒரு டீ! மாலை ஸ்நாக்ஸ் ரெடி! அண்ணாமலை பாதயாத்திரை!
ராமநாதபுரம்: என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பாதயாத்திரை தொடங்கும் நிலையில், அதில் பங்கேற்கும் கட்சிக்காரர்களுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக சுடச்சுட வடை, போன்டா, தேநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
கூடவே ஆளுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் கேட்கக் கேட்க இல்லையென்று சொல்லாமல் கொடுக்கப்படுகின்றன. ராமநாதபுரத்தில் இன்று நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை வரும் ஜனவரி இரண்டாவது வாரம் சென்னையில் நிறைவு செய்கிறார்.

அதேபோல் மூன்று வேளையும் பாதயாத்திரையில் பங்கேற்கும் பாஜகவினருக்கு அறுசுவை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகும் செலவுகளே பல 'சி' க்களை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 168 நாட்கள் அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைபயணம் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறது பாஜக தலைமை. முதலில் குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டுமே அண்ணாமலை நடைபயணத்தில் கலந்துகொள்ளும் வகையிலும் மற்ற இடங்களில் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.
பாஜக தேசியத் தலைமை என்ன நினைத்ததோ தெரியவில்லை, முழு நடைபயணத்திலும் அண்ணாமலையை பங்கேற்க வைத்திருக்கிறது. எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது அவர் மேற்கொண்ட 'வேல் யாத்திரை' இன்றளவும் பேசக்கூடிய வகையில் அப்போது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்கவும் அந்த யாத்திரை அடித்தளம் அமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications