அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை! கருப்பு சிவப்பு பையை திறந்து பார்த்த அதிகாரிகள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதாக பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதனால் யாரும் எந்த வித ஆவணங்களும் இன்றி ரூ 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது என்பது தேர்தல் நடத்தையில் ஒன்றாகும். இது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக கொண்டு வந்த விதியாகும்.
ரூ 50 ஆயிரத்திற்குள் பணம் கொண்டு செல்லலாம். அதற்கு மேல் கொண்டு போய் ஆவணங்கள் இல்லாவிட்டால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். ஒரு வேளை ரூ 10 லட்சத்திற்கு மேல் யாராவது பணம் கொண்டு சென்றால் அந்த வழக்கை வருமான வரித் துறை விசாரிக்கும்.
இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் சரியாக 6 நாட்கள்தான் இருப்பதால் எப்படியும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கக் கூடும் என்பதால் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் வாகனங்களை சோதனையிட்டு வருகிறார்கள் பறக்கும் படையினர்.
இதற்காக தமிழகத்தில் 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பணியே ஆவணங்களின்றி அதிக அளவு பணம், பரிசுபொருள்கள் உள்ளிட்டவை கொண்டு சென்றால் பறிமுதல் செய்வதுதான். அந்த வகையில் இதுவரை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்பி கனிமொழி, முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் உள்ளிட்டோரின் கார்களை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அது போல் நேற்றைய தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் தேனியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது அதிமுக ஒரு நாள் தினகரன் வசம் வரும் என பேசி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து அதிமுக உரிமை மீட்பு குழுவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்து ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அண்ணாமலை ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஹெலிகாப்டரின் உள்ளே, அண்ணாமலை அமர்ந்திருந்த இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது. அங்கிருந்த கருப்பு சிவப்பு நிற பையையும் சோதனையிட்டனர். அதில் காலி வாட்டர் பாட்டில் உள்ளிட்டவை இருந்தன.
இதையடுத்து பறக்கும் படையினர் அங்கிருந்து சென்று விட்டனர். மேலும் அண்ணாமலையும், ஓபிஎஸ்ஸுக்கு பிரச்சாரம் செய்ய அரண்மனை பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications