சிட்டா, பட்டா மாறுதல்.. பரமக்குடி தலையாரி பண்ண காரியம்? ராமநாதபுரம், திருவள்ளூர் அரசு அலுவலக சம்பவம்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றைய தினம் ஒரே நாளில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அந்தந்த மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.. அரசு ஊழியர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. கைதான நபர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். என்ன நடந்தது தெரியுமா?

நிலத்தை அளக்க வேண்டும் என்றும், பட்டா, சிட்டாவில் மாறுதல் வேண்டும் என்றும், சாதி சான்றிதழ் கோரியும், உதவித்தொகை கேட்டும் ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள்..

Chitta Patta Change Thalaiyari

இதற்காக அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகவே செல்ல நேரிடும்போது, அவர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார்களை அனுப்பிவிடுகிறார்கள்.

அடுத்தடுத்து கைது

இந்த புகார்களின் பேரில் விசாரணை, ஆய்வு என்று வரும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் புகார்கள் நிரூபணமாகின்றன. இதனால் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள்.. கைதானவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நீதிமன்றங்கள் தண்டனைகளையும் தந்து வருகிறது. ஆனாலும், லஞ்சம் குறையவில்லை.

இதோ ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவர் சிக்கியிருக்கிறார்.. பரமக்குடி முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதறகாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு உரப்புளி தலையாரி இராசையா 45, புகார்தாரரிடம் தனக்கும், விஏஓ ஸ்டாலினுக்கும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர கேட்டுள்ளார்.

தலையாரி சிக்கினார்

இதில், லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையின் அறிவுறுத்தலின் பேரில், தாலுகா அலுவலகம் முன்பு, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கிய தலையாரி இராசையாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். ஸ்டாலினுக்கும் இவ்வழக்கில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

நேற்று திருவள்ளூர் மாவட்டத்திலும் ஒருவர் சிக்கியிருக்கிறார்.. திருத்தணி அருகே வீரகநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கோடீஸ்வரி. இவர் பகுதியில் உள்ள இடங்களுக்கு கணினி பட்டா வழங்க அந்த கிராமத்தில் உள்ள 25 குடும்பங்களிடம் லஞ்சம் வாங்கியிருக்கிறாராம்..

Chitta Patta Change Thalaiyari

சிக்கிய அதிகாரி

அதாவது, ரூ.3 ஆயிரம் வீதம் 25 குடும்பங்களை சேர்ந்தவர்களிடமிருந்து ரூ.75 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார்.. இதையடுத்து விஏஓ கோடீஸ்வரி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தந்துவிட்டார்கள்..

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை ப போலீசார், கணினி பட்டா வழங்க லஞ்சம் பெற்றபோது கோடீஸ்வரியை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, இப்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகினறனர். லஞ்சம் வாங்குவதில் ஆண்களுக்கு நிகராக பெண் அதிகாரிகளும் கைதாகி வருவது பொதுமக்களுக்கு கவலையை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+