நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலம்! பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் விறு விறு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டு வரும் நாட்டின் முதல் செங்குத்து தூக்குப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகின்றன.
கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய பாம்பன் கடல்பாலம் கட்டுமானப் பணிகளை 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மழை மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக அந்தப் பணிகள் கூடுதலாக ஓராண்டு நடைபெற்றது.
இந்நிலையில் கடல் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியிருப்பதால் இப்போது வேகமெடுத்துள்ளன.

பாம்பன் பாலம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பாலமானது தமிழக சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. வாகனங்கள் செல்ல ஒரு பாலம், ரயில் செல்ல ஒரு பாலம் என கடலுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள அந்த 2 பாலங்களை கண்டு ரசிக்காமல் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் சென்றதே இல்லை. இந்நிலையில் ரயில் வழித் தடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சகத்தால் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

ரூ.279 கோடி ரூபாய்
ரூ.279 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் இந்த ரயில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 2,078 மீட்டர் நீளத்திற்கு 101 தூண்கள் பொருத்தப்பட்டு ரயில் பாலம் கடலுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய பாம்பன் கடல்பாலம் கட்டுமானப் பணிகளை 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கட்டுமானப் பணிகள்
ஆனால் மழை மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக அந்தப் பணிகள் கூடுதலாக ஓராண்டு நடைபெற்றது. ஏற்கனவே உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ரயில் பாலத்தில் அவ்வப்போது விரிசல் விழுவதால் இந்த புதிய பாலம் கட்டும் முடிவை எடுத்தது மத்திய அரசு. கடலுக்கு நடுவில் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப்பாலம் அமையவிருப்பது தான் இந்த பாலத்தின் கூடுதல் சிறப்பு.

இணைப்பு பாலம்
ராமநாதபுரத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாலமாக பாம்பன் பாலம் திகழ்கிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வருபவர்களும் பாம்பன் பாலத்தின் மீது வாகனங்களை நிறுதி அங்கு ஒரு செல்ஃபியை கிளிக் செய்யாமல் செல்ல மாட்டார்கள். அந்தளவுக்கு பாம்பன் பாலம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications