உச்சகட்ட உட்கட்சி மோதல்! திமுகவில் அரங்கேறிய பஞ்சாயத்து! ஒட்டு மொத்தமாய் அணி மாறும் உடன்பிறப்புகள்!
இராமநாதபுரம் : திமுக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் இடையேயான மோதல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பலரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தியில் உள்ள உடன்பிறப்புகள் மாற்றுக் கட்சிகளுக்குச் செல்லலாமா என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலில் ஒன்றிய நகர அளவிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது கட்சியின் ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களே மீண்டும் தேர்தெடுக்கப்பட 100 சதவிதம் வாய்ப்புகள் உள்ளது.
வத்தல்மலைக்கு 2 டிக்கெட் கொடுங்க! அரசுப் பேருந்தில் பயணித்த அமைச்சர்கள்! ருசிகர நிகழ்வு!

திமுக உட்கட்சி தேர்தல்
இந்நிலையில் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் இடையேயான அதிகார மோதல்கள் காரணமாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கட்சியின் உடன்பிறப்புகள் வேதனையில் உள்ளனர். உட்கட்சி தேர்தலை நடத்தும் அதே வேளையில் கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றிய மூத்த நிர்வாகிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுமுகமாக உட்கட்சி தேர்தலை நடத்தவும் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட நிர்வாகிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடத்த திமுக தலைமையகம் உத்தரவிட்டிருந்தது.

பதவி பறிப்பு
ஒன்றிய செயலாளர், பேரூர் செயலாளர்,செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர், அணி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் உடன்பிறப்புகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தனது ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் ஒன்றிய செயலாளராக இருந்த புல்லானி, காந்தி, ஜீவானந்தம் உட்பட மொத்தம் நான்கு நிர்வாகிகளை மாற்றம் செய்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதுள்ளார் என உடன்பிறப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்

பாஜக திட்டம்
இந்த தகவல் மாற்றுக் கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்றுள்ள நிலையில் அவர்களை தங்கள் தரப்புக்கு இழுக்க திட்டமிட்டு வருகின்றனர். தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், மாற்றுக் கட்சிக்கு செல்வது நல்லதில்லை என நினைத்தாலும், சொந்த கட்சியாலாயே புறக்கணிப்பட்டிருப்பதால் என்ன செய்வதென்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வலை வீசும் கட்சிகள்
பாஜகவில் தற்போது ஆளுங்கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு கொண்டுவர வலை வீசப்பட்டு வரும் நிலையில் அம்மாவட்டத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியிருக்கும் நிலையில், அவர்களை தனியாக சந்தித்துப் பேசி கட்சிக்குள் கொண்டு வர அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்கின்றனர் மாநில அளவிலான நிர்வாகிகள்.