ராமேஸ்வரம் பாம்பனில் மீனவர்கள் திடீர் போராட்டம்.. கடலில் குதிக்க முயன்ற மீனவ பெண்களால் பரபரப்பு
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் பாம்பன் பகுதியில் மீனவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பனில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் திடீரென கடலில் இறங்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் பெரும் இன்னலை சந்திக்க வேண்டியுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது, மீன் பிடி பொருட்களை சேதப்படுத்துவது என அடிக்கடி அட்டூழியத்தில் இலங்கை கடற்படை ஈடுபடுகிறது.

இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு, தமிழக அரசு முன்வைத்து வருகிறது. எனினும், இதுவரை உறுதியான ஒரு தீர்வு எட்டியபாடில்லை. நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்றும் தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ராமநாதபுரத்தில் மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாம்பன் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் மீனவ பெண்களும் பங்கேற்றனர். போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் மற்றும் அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் வாகனங்கள் மண்டபம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. போரட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே, போராட்டத்தின் போது சில பெண்கள் கடலில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலுக்குள் சென்ற மீனவ பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தின் போது திடீரென பெண்கள் கடலில் குதிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட கண்காணிப்பாளர், உங்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய அரசின் வாயிலாக இலங்கைக்கு கோரிக்கை வைத்து உடனடியாக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்டு விசைப்படகு மீனவர்கள் கலைந்து சென்றனர்.
எனினும், மூன்று மாதங்களுக்கு முன்பாக சிறை பிடிக்கப்பட்டு இலங்கை புத்தளம் சிறையில் இருக்கக்கூடிய நாட்டு படகு மீனவர்களின் உறவினர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இருப்பினும் போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கிருந்து புறப்பட்டனர். அப்போதுதான் , மீனவர்களின் உறவினர் சிலர் பாம்பன் பாலத்திற்கு அடியில் கடலுக்குள் இறங்க முயற்சித்னர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications