தங்கம் விலை இதோடு நிற்காது.. புதிய நோய்கள் பரவும்.. ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தில் ஷாக் தகவல்
ராமநாதபுரம்: நடப்பு ஆண்டில் அதிக மழை பெய்யும், புதிய நோய் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும், தங்கம் விலை இதோடு நிற்காது உயரும் போன்ற அதிர்ச்சிகர தகவல்கள் ராமேஸ்வரம் கோயிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளது.
புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும், தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ் புத்தாண்டு தினமான நேற்று கோயிலில் தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி
சுவாமி சன்னதி எதிரே உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி அருகே பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 12.30 மணி இந்த நிகழ்வு நடைபெற்றது. கோயில் குருக்கள் சிவமணி, 2025 ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 2026 ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பஞ்சாங்கத்தின் முக்கிய தகவல்கள் குறித்து வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
* மருத்துவத் துறையில் இந்தியா முதலிடம் வகிக்கும்.
* அன்னிய நாடுகளின் முதலீடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது.
* தங்கம், வெள்ளி விலை இன்னும் உச்சத்தை தொடும். இதோடு நிற்காது.
* மருந்து பொருட்களின் விலை அதிகரிக்க கூடும்.
மக்களிடையே பணப்புழக்கம் குறையும்
* நிலக்கரி, இரும்பு, சுரங்கங்கள், பெட்ரோலிய கிணறு போன்றவற்றில் விபத்துகள் ஏற்படும்.
* ரத்தம் தொடர்பான புதிய நோய்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும்.
* நிலுவையில் உள்ள பல முக்கிய வழக்குகள் முடிவுக்கு வரும்.
* பாலியல் தொல்லைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
* மது, போதை பொருட்கள் விலை உயரும்.
* வட மாநிலங்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படும்.
* இந்த ஆண்டு மழை அதிகமாகவே இருக்கும். விவசாயம் நன்றாக இருக்கும்.
அரசியல் கட்சி தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
* ஆன்மிகத்துறையில் இருப்பவர்களுக்கு பல தொல்லைகள் ஏற்படும்.
* வெளிநாடுகளில் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்படுவர்.
* பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும்.
நிலச்சரிவு, பூமி அதிர்வு ஏற்படும்?
* உலகத்தில் ஆங்காங்கே மத கலவரம், போர் அபாயம் இருக்கும்.
* சதுரகிரி, மேகமலை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, பூமி அதிர்வு ஏற்ப்டக்கூடும்.
* வேதாரண்யம், ராமேசுவரம், தனுஷ்கோடி கடற்கரையில் சுமார் 2 கி,மீ. வரை கடல்நீர் உள்வாங்க நேரும்.
* எல்லையில் பதற்றம் இருக்கும்.
* புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும்.
* அணு ஆயுத உற்பத்தி அதிகரிக்கும். என்பன உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications