கள்ளக்காதல் விபரீதம்.. இரண்டு பேர் தந்த டார்ச்சர்.. ராமநாதபுரத்தில் இளம் பெண் எடுத்த ஷாக் முடிவு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தொடர்ந்து தெரியாமல் கள்ள உறவில் இருந்ததை அப்பகுதியில் இருந்த இருவர் தெரிந்து கொண்டு மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது.
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா (வயது 20). இவருக்கும் பரமக்குடி அருகே செல்லூர் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது
இந்த நிலையில் ரேஷ்மாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தென்னரசு என்பவருக்கும் கள்ள உறவு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இரவு நேரத்தில் விமல்ராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில் தென்னரசு, ரேஷ்மாவுடன் தனிமையில் இருந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஒருநாள் இரவு ரேஷ்மாவை சந்தித்து விட்டு தென்னரசு சுவர் ஏறிக் குதித்துச் சென்றுள்ளாராம்.அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாரும், பாலமுருகனும் பார்த்துள்ளனர்.

கணவன் கோபம்
இந்த நிலையில், முத்துக்குமார், பாலமுருகன், ஆகியோர் விமல்ராஜுடன் ஒருநாள் மது அருந்திக் கொண்டிருந்த போது தென்னரசு சுவர் ஏறிக்குதித்து சென்றது குறித்து கூறியுள்ளனர். மதுபோதையில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற விமல்ராஜ் தனது மனைவி ரேஷ்மாவை கடுமையாக அடித்து உதைத்து உள்ளார்.

தற்கொலை செய்வேன்
இதையடுத்து ரேஷ்மா, முத்துக்குமாரையும், பாலமுருகனையும் செல்போனில் தொடர்பு கொண்டு, தென்னரசு குறித்து எதற்காக தனது கணவரிடம் கூறினீர்கள் என கேள்வி எழுப்பி இருக்கிறார். அவர்கள் இருவரின் பெயரையும் எழுதி வைத்துவிட்டு தான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினாராம்,.

ரேஷ்மா கடிதம்
இந்நிலையில் தனது கள்ளக்காதல், கணவனுக்கு தெரிந்தை எண்ணி மனம் உடைந்த ரேஷ்மா கடந்த 5ம்தேதி வீட்டில் தனிமையில் இருந்தபோது தன் குழந்தையின் தொட்டில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். முன்னதாக தனது தற்கொலைக்கு பாலமுருகனும், முத்துகுமாரும் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ரேஷ்மா தற்கொலை செய்திருக்கிறார்.

ராமநாதபரத்தில் அதிர்ச்சி
திருமணமாகி நான்கு ஆண்டுகள் தான் ஆகிறது என்பதால், பரமகுடி உட்கோட்ட கோட்டாட்சியர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதன்பின்னர் ரேஷ்மாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார், பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தகாத உறவால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications