வழுதூர் ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா! ஃபாஸிஸவாதிகளை தனிமைப்படுத்த இதுவே வழி! தமிமுன் அன்சாரி யோசனை!
ராமநாதபுரம்: ஃபாஸிஸவாதிகளை தனிமைப்படுத்த சிறுபான்மையினர் மட்டும் கை கோர்த்தால் முடியாது என்றும், பெரும்பான்மையினரின் உள்ளங்களை வென்றெடுத்து அவர்களையும் இப்பணியில் இணைக்க வேண்டும் என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

வழுதூர் பள்ளிவாசல்
ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைப்பெற்றது. சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் எல்லா சமூகத்தினரும் வரவேற்பு பேனர்களை வைத்து தங்கள் அன்பையும் வரவேற்பையும் வெளிக்காட்டியிருந்தனர். அதுபோல் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் பிரமுகர்கள் வந்திருந்ததால், கட்சியினரும் தனித் தனியாக பதாகைகள் வைத்திருந்தனர்.

ரூ.8 லட்சம் ஊதியம்
வழுதூர் ஜும்ஆ பள்ளிவாசலை வடிவமைத்த பொறியாளர் பால் பாண்டியனுக்கு 8 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில், அதனை அவர் மீண்டும் அந்தப் பள்ளிவாசலுக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார். இதனிடையே இந்நிகழ்வில் பங்கேற்ற மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, இணக்கமான நிகழ்வுகளை அதிகப்படுத்த வேண்டும் எனப் பேசினார்.

இஃப்தார் விருந்து
மேலும் வழுதூர் ஜும் ஆ பள்ள்வாசலில் ரமலான் நேரங்களில் எல்லா சமூக மக்களையும் அழைத்து இஃப்தார் விருந்து அளிக்க வேண்டும் என்றும், மற்ற மாதங்களில் பள்ளியில் நடைபெறும் தொழுகை முறைகளை பல்வேறு சமூக மக்களையும் அழைத்து விளக்க வேண்டும் என்றும் அது புரிதலுக்கு வழி வகுக்கும் என்றும் பேசினார்.

ஃபாஸிஸவாதிகள்
இணக்கமான நிகழ்வுகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், ஃபாஸிஸவாதிகளை தனிமைப்படுத்த சிறுபான்மையினர் மட்டுமே கைக்கோர்ப்பது சாத்தியமல்ல என்றும், பெரும்பான்மையினரின் உள்ளங்களையும் வென்றெடுத்து அவர்களையும் இப்பணியில் இணைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார். மேலும், மதவெறி எந்த தரப்பிலிருந்து வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்றும், அது தான் நீதி என்றும் பேசினார்.

முக்கியப் பிரமுகர்கள்
இந்நிகழ்வில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மைதீன், நவாஸ் கனி MP, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications