Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை டூ பரமக்குடி... நள்ளிரவில் பைக்கில் லாங் டிரைவ் வந்த புதுமண தம்பதி.. இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிடாரிச்சேரி புத்தூரைச் சேர்ந்த மதன் மற்றும் சங்கீதாவுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. மதன், உடற்பயிற்சி கூடம் ஒன்றை பரமக்குடியில் நடத்தி வருகிறார். பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி நான்கு வழிச்சாலையில் புதுமணத்தம்பதி பைக்கில் சென்றனர். நள்ளிரவில் பாலத்தில் சென்ற போது, தடுப்பு சுவர் புதுப்பெண்ணுக்கு எமனாக மாறி உள்ளது. கணவர் காயம் அடைந்தார்.

இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் பயணிக்கும் போது மிக கவனமாக செல்ல வேண்டும். முடிந்தால் நள்ளிரவு வேளையில் நீண்ட தூரங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை தவிர்ப்பது கூட நல்லது. 100 கிமீ தூரம் , 200 கி மீ தூரம் பைக்கில் நள்ளிரவில் பயணிப்பது நல்லது. ஏனெனில் சிறு கவனக்குறைவும் பெரிய விபத்திற்கு காரணமாகிவிடும்.

Madurai Paramakudi

சிலருக்கு அந்த சாலை புதிதாக இருக்கும். வேகமாக வரும் போது பள்ளம் இருப்பது தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் எதிரே வரும் வாகனங்களும் பள்ளத்தை தெரியாமல் கட்டுப்பாடு இல்லாமல் மோதுவது போல் வரலாம். எனவே சாலையில் கவனமாக செல்ல வேண்டும். பரமக்குடி அருகே புதுமண தம்பதிக்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிடாரிச்சேரி புத்தூரைச் சேர்ந்த 30 வயதாகும் மதன் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதாவுக்கு 27 வயது ஆகிறது. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

உடல் எடை குறைப்பு பயிற்சிக்கூடம் நடத்துகிறவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் மதுரையில் நடந்தது. அதில் மதன் - சங்கீதா தம்பதியினர் கலந்து கொண்டு விளையாடியிருக்கிறார்கள். போட்டி முடிந்து மதுரையில் இருந்து பரமக்குடிக்கு இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்கள். நள்ளிரவில் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி நான்கு வழிச்சாலையில் சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இருக்கிறது. சாலையோர ஒரு பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன், மனைவி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். மோட்டார் சைக்கிள் மட்டும் பாலத்தில் கிடந்திருக்கிறது.

பள்ளத்தில் விழுந்ததில் சங்கீதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதனுக்கு கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இது பற்றி பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் கணவருடன் சென்றபோது விபத்து ஏற்பட்டு, புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பரமக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+