இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்.. பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலி.. போலீஸ் முக்கிய அறிவிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது. அவரது 68-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி இன்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதையொட்டி 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சந்தீஸ் நேற்று செய்தியாளா்களிடம் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே இமானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்திருக்கிறது. இங்கு நாளை (இன்று) அஞ்சலி செலுத்த வருவோருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் 24 மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், 32 ஏ.டி.எஸ்.பிக்கள், 70 டி.எஸ்.பி.க்கள் உள்பட 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் 38 சோதனைச் சாவடிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க நவீன கேமரா பொருத்தப்பட்ட 2 'ட்ரோன்'கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. பதற்றமான இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களும், கூடுதல் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்
நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருவோா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்திலோ, திறந்தவெளி வாகனத்திலோ வரக்கூடாது. அஞ்சலி செலுத்த வருவோா் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். அரசியல் கட்சியினா், சமுதாயத் தலைவா்களுக்கு நினைவிடம் வந்து செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இமானுவேல் சேகரன் நினைவிடம் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று அந்தப் பகுதியில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறது. பரமக்குடி பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா் தங்க வைக்கப்பட்டனா். இதனால் நேற்றும் இன்றும், பரமக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications