பாலியல் குற்றங்களுக்கு செல்போன்தான் காரணம்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை.. கருணாஸ் பேச்சு!
ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு மக்களின் வாழ்க்கை முறையும், செல்ஃபோன் பயன்பாடுமே காரணம் என்று நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை மட்டும்தான் என்று கூறிய அவர், அதனை ஒருநாளும் திமுக அரசு விட்டுக் கொடுக்காது என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடங்கி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதிலும் கடந்த இரு வாரங்களாக பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி என்று பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதன் காரணமாக தமிழக அரசு சட்டம் ஒழுங்கை சரி வர கவனிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் தரப்பில் பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடிகரும், திமுக ஆதரவாளருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எனது பிறந்தநாளை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆசி பெற வந்தேன். இந்த பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிவகாசியில் வரும் பிப்.22, 23 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற உள்ளது.
தவெக தலைவர் விஜய்-க்கு பாதுகாப்பு அளிப்பது என்பது துறை சார்ந்த முடிவாக கருதுகிறேன். எல்லாவற்றிலும் அரசியல் இருக்கும். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிறைவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் எந்த தவறும் நடக்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தொடந்து சமீப காலமாக அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு, சமீபமாக அதிகரிக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் இன்றைக்கு நாம் வாழும் வாழ்க்கை முறைதான். செல்ஃபோன் பயன்பாடு அதிகரிப்பால் தவறான விஷயங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.
இதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தும் போது, அதனை பார்த்து மற்றவர்கள் அதே தவறை செய்கிறார்கள். இதனால் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரிக்கிறது என்பதே எனது கருத்து. ஆகவே, அப்படி நடக்கக் கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பாஜக என்ற மதவாத சக்திகளிடம் இந்தியா மாட்டிக் கொண்டு தத்தளிக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். கடந்த 5 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தது. அமலாக்கத்துறையை கையில் வைத்து கொண்டு பாஜக இந்தியா முழுவதும் செய்த விஷயங்களை, டெல்லியிலும் செய்திருக்கிறார்கள்.
அதேபோல் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால், நிதி வரும் என்று சொன்னால், அப்படிப்பட்ட நிதியே தேவையில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிவிட்டார். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கைதான். அதனை எந்த காலத்திலும் திமுக அரசு விட்டுக் கொடுக்காது என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications