இரவு முழுக்க குடி.. அதிகாலையில் தப்பிய நண்பர்.. ராமேஸ்வரம் லாட்ஜ் அறையில் ஆண் சடலம்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த கோயிலில் தர்ப்பணம் உள்ளிட்டவை கொடுக்கப்படுவதால் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக நிறைய விடுதிகள் காணப்படுகின்றன. இதில் பக்தர்கள் தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்புவர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி

அந்த வகையில் தூத்துக்குடியை அடுத்த சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் ராமேஸ்வரத்திற்கு புதன்கிழமை சென்றுள்ளார். அங்கு கோயிலுக்கு எதிரே நடுத்தெருவில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். இவருடன் ஆண் நண்பர் ஒருவரும் சென்றிருந்தார்.

 சுவாமி தரிசனம்

சுவாமி தரிசனம்

இந்த நிலையில் இருவரும் ராமநாத சுவாமியை தரிசனம் செய்துவிட்டு உணவு பொட்டலங்களை வாங்கி கொண்டு விடுதிக்கு வந்தனர். அப்போது இருவரும் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இரவு முழுக்க இருவரும் எதையோ பேசி கொண்டிருந்ததாக லாட்ஜ் ஊழியர்கள் கூறுகிறார்கள். பின்னர் அதிகாலையில் பாண்டியராஜனுடன் தங்கியிருந்த நபர் எங்கோ கிளம்பிவிட்டார்.

ரூம் சர்வீஸ்

ரூம் சர்வீஸ்

ரூம் சர்வீஸுக்காக அறையின் கதவை தட்டிய போது யாரும் திறக்கவில்லை. பின்னர் பல முறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த ஊழியர், விடுதி மேலாளரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

 இறந்த பாண்டியராஜன்

இறந்த பாண்டியராஜன்


சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அறையின் கதவை உடைத்து பார்த்த போது அங்கு பாண்டியராஜன் இறந்து கிடந்தார். அவருடன் தங்கியிருந்த நபரை காணவில்லை. மேலும் அளவுக்கு அதிகமான மது குடித்ததால் பாண்டியராஜன் இறந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு என்னாச்சு என்பதை கேட்க உடன் தங்கியிருந்த நபருக்கு போன் செய்தால் அவர் போனை எடுக்கவில்லை.

உடனிருந்த நண்பருக்கு வலை

உடனிருந்த நண்பருக்கு வலை

ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. போலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷபுரத்தில் பாண்டியராஜனின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+