பாம்பன் ரயில் பாலம் இன்னும் 2 வாரத்தில் திறப்பு.. பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.. வெளியான தகவல்!
ராமநாதபுரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா இன்னும் 2 வாரத்திற்குள் நடக்கும் என்றும், இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்றும் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பழைய ரயில் தூக்கு பாலம் சேதமடைந்ததால், பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமரின் வருகைக்காக திறப்பு விழா தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. பணிகள் முடிவடைந்து சுமார் 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் 2 வாரங்களுக்குள் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய பாலம் திறப்புக்கு முன்பாக இதுவரை 3 முறை ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட ரயில்வே உயர் அதிகாரிகள் பாம்பன் பாலம் பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.
பாம்பன் சாலை பாலத்திலிருந்து புதிய ரயில் பாலம், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆலய வளாகம், மண்டபம் முகாம் ஹெலிபேட் தளம், குந்துகால், மண்டபம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷார் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள், காவல்துறை, மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகளுடன், விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் திறந்து வைக்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், இரு வாரத்திற்குள் பாம்பன் பாலம் திறப்பு விழா நடக்கும். பழைய பாலத்தை பராமரிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். புதிய பாலத்துக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெயர் வைப்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications