பட்டா திருத்தம்.. ஆவணத்தில் இத்துனூண்டு புள்ளி.. இதுக்கு போயி? ராமநாதபுரத்தில் விழித்த அரசு ஊழியர்
ராமநாதபுரம்: தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் லஞ்ச சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அடிக்கடி கைதாகி வருகிறார்கள். கைதான நபர்களுக்கு நீதிமன்றங்களில் தண்டனைகளும், தரப்பட்டு வருகின்றன. எனினும், கைது நடவடிக்கைகள் லஞ்சத்தின் பேரில் பெருகியபடியே உள்ளது. இதோ ராமநாதபுரத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ளது சூரன்கோட்டை.. இங்கு வசித்து வருபவர் விஸ்வநாதன்.. இவருக்கு 30 வயதாகிறது.. இவருக்கு, தன்னுடைய அம்மா காமாட்சி பெயரிலுள்ள கம்ப்யூட்டர் பட்டாவில், ஒரு புள்ளியை மட்டும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை
இதற்காக ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளரான முகமதுதிலீப் 47, என்பரை அணுகினார். அதற்கு முகமது திலீப், ரூ.1000 லஞ்சம் கேட்டாராம்.. இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விஸ்வநாதன் புகார் செய்தார்.. பிறகு, 2015 மார்ச் 18ம்தேதி போலீசார் ரசாயனம் தடவிய 1000 ரூபாயை வழங்கினர். இதனை விஸ்வநாதன் முகமது திலீப்பிடம் கொடுத்தபோது கையும் களவுமாக போலீசார் அவரை கைது செய்தனர்.
அசிங்கமா போச்சு
இதற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், முகமது திலீப்புக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோகன்ராம் தற்போது தீர்ப்பளித்துள்ளார்.. இந்த அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க தற்போது உத்தரவிட்டுள்ளார்..
இப்போது முகமது திலீப் ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.. 1000 ரூபாய் லஞ்சம் கேட்டு, வேலையை இழந்து, 4 வருடம் சிறைக்கும் செல்ல நேரிட்டுள்ளது..!!
சிக்கிய விஏஓ உதவியாளர்
கடந்த வாரம் திருவாரூர் மாவட்டத்திலும் இதுபோலவே ஒரு தண்டனை வழங்கப்பட்டது.. அதாவது, புலிவலம் பகுதியை சேர்ந்த அருள்தரண், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக 2015ம் ஆண்டில் புலிவலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது, விஏஓ -வின் உதவியாளராக பழனிவேல் என்பவர், வாரிசு சான்றிதழ் கேட்டதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்..

அவ்வளவு பணம் இல்லாததால், ரூ.500-ஐ மட்டும் அட்வான்ஸாக பழனிவேலிடம் தந்த அருள்தரண், மிச்ச பணத்தை மறுநாள் தருவாக சொல்லியுள்ளார். ஆனால், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் தந்ததன் பேரில், பழனிவேல் கைதானார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்சம் வாங்கிய பழனிவேலுக்கு 4 வருடங்கள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.. இதுபோன்ற தண்டனை உத்தரவுகள், வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் மிகுந்த அதிர்வலையை உண்டுபண்ணி கொண்டிருக்கிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications