நவாஸ் கனி MP ஊருக்குள் நுழையக் கூடாது! அரசியல் வியாபாரி! புதுமடத்தில் சர்ச்சை போஸ்டர்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுமடம் கிரமத்திற்குள் நவாஸ் கனி எம்.பி. நுழையக் கூடாது என ஊர் மக்கள் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நாளை நவாஸ் கனி எம்.பி. புதுமடத்திற்கு செல்லவுள்ள நிலையில் இந்த எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பாளர்களை சமாதானம் செய்வதற்குரிய முயற்சியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தரப்பு முன்னெடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும் வகையில் தங்கள் ஊருக்கு நவாஸ் கனி எதையுமே செய்யவில்லை என்பது புதுமடம் ஊர் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இதனிடையே நவாஸ் கனியை கண்டித்து புதுமடத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு;
'' * ராமநாதபுரம் முஸ்லீம் லீக் MP நவாஸ் கனி அவர்களே ! புதுமடத்தில் நுழையாதீர்கள்!''
''* 2019 எம்.பி தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க வந்தீர்கள்! வெற்றி பெற்றதும் புதுமடத்தை மறந்தீர்கள்! சொல்லும் படியாக புதுமடத்திற்கு எதுவுமே செய்யவில்லை! ஐந்தாண்டு முடிந்து விட்டது!''
''* ஓரிரு மாதத்தில் மீண்டும் தேர்தல் வருவதால், உங்கள் முகத்தை மக்களுக்கு நியாபகப்படுத்த, தேர்தல் விளம்பரத்திற்காக மீண்டும் 04/02/24 புதுமடம் வருகிறீர்கள்!''
''* மக்களை ஏமாற்றும் அரசியல் வியாபாரி MP நவாஸ் கனி அவர்களே! புதுமடம் மக்கள் ஏமாளிகள் அல்ல! மனசாட்சி ஒன்று இருந்தால் புதுமடத்தில் நுழையாதீர்கள். நாங்கள் வரவேற்க மாட்டோம்.'' ''ஊர் பொதுமக்கள், புதுமடம்.'' இவ்வாறு அந்த சர்ச்சைக்குரிய போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications