தேம்பி தேம்பி அழுதுகொண்டே வந்த வயசுப்பொண்ணு.. அலறிய ஆஸ்பத்திரி..ஹய்யோ கொடுமை.. விக்கித்த ராமநாதபுரம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, ஒட்டுமொத்த மக்களும் அதிர்ந்து போயுள்ளனர்.. இது தொடர்பான விசாணையையும் போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. போலீசாரும், கோர்ட்டும், இது தொடர்பான வழக்குகளில் எவ்வளவோ அறிவுரைகளை சொல்லி, கடிவாளங்களை போட்டாலும், தண்டனை வழங்கினாலும், பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.. பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்தபடியே உள்ளன.. இதோ ராமநாதபுரத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.

இளம்பெண்: திருவாடானை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரும்கூட.. தாயின் அரவணைப்பில் வசித்து வருகிறார்.
இவருக்கு 2 நாளைக்கு முன்பு, அதிகாலை நேரம், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.. அதனால், இந்த பெண்ணின் தாயார், 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியிருக்கிறார்.. சிறிது நேரத்திலேயே 108 ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு வந்துவிட்டது.. அதில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், அவரது அம்மாவும், ராமநாதபுரம் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்கள்.
பாலமுருகன்: 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளரான பாலமுருகன் என்பவர் இவர்களுடன் வந்துள்ளார்.. முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூரை சேர்ந்தவர் இந்த பாலமுருகன்.
மருத்துவமனைக்குள், மனநலம் பாதித்த பெண்ணையும், அவரது அம்மாவையும், ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறக்கி, மருத்துவமனைக்குள்ளும் அழைத்து சென்றுள்ளார் பாலமுருகன்.. காலை நேரம் என்பதால், சிகிச்சை பிரிவில் இன்னும் யாருமே வேலைக்கு வராமல் இருந்தனர்..
"சற்று நேரத்தில் அனைவரும் வந்துவிடுவார்கள், அதற்குள் டோக்கன் போட்டுவிட்டு, ரிஜிஸ்தரில் என்ட்ரி செய்துவிட்டு வருகிறேன்" என்று சொன்ன பாலமுருகன், அம்மாவை மட்டும் அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை தன்னுடன் அழைத்து சென்றார்.
ஆம்புலன்ஸ்: சிறிது நேரம்கழித்து, அனைத்து மருத்துவமனை பணியாளர்களும் டியூட்டிக்கு வந்துவிட்டனர்.. நீண்ட நேரமாக பெஞ்சில் உட்கார்ந்திருந்த அம்மாவிடம், எதற்காக வந்திருக்கிறார்? என்று விசாரித்திருக்கிறார்கள். அப்போது ஆம்புலன்ஸில் தன்னுடைய மகளை அழைத்து வந்ததாகவும், பாலமுருகன் தன்னுடைய மகளை பதிவு செய்வதற்காக அழைத்து சென்றதாகவும் சொன்னார்..
ஆனால், கிட்டத்தட்ட 1 மணி நேரம் கழித்து, மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் மட்டும் வந்தார்.. பாலமுருகனை காணவில்லை.. ஏன் இவ்வளவு நேரம்? என்ன ஆனது? எங்கே போனாய்? என்று அம்மா கேட்டார்.. ஆனால், அந்த பெண்ணால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. பயந்த மனநிலையிலேயே காணப்பட்டார்.. முகமெல்லாம் வெளிறிப்போய் இருந்தது.
பலாத்காரம்: இதனால் பதறிப்போன மருத்துவ பணியாளர்கள், அந்த பெண்ணை அழைத்து பரிசோதித்தனர். அப்போதுதான், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ந்து போனார்கள்.. பிறகு, பாலமுருகன் எங்கே அழைத்து சென்றார் என்று திரும்ப திரும்ப கேட்டார்கள்..
அப்போது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறையை அந்த பெண் காட்டினார்.. அதற்குபிறகுதான், மருத்துவமனை வளாகம் சார்பில் போலீஸூக்கு புகார் தரப்பட்டது.. ஆனால், அந்த புகாரை போலீஸார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.. அதற்கு பிறகுதான், பெண் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி, காவல்துறை உயர் அதிகாரியின் கவனத்திற்கு சென்றிருக்கிறது.. அதற்குபிறகே, போலீசார் இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்தார்களாம்.. இறுதியில், பாலமுருகனையும் கைது செய்திருக்கிறார்கள்.
பரபரப்பு: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலன்ஸ் ஊழியரால் பலாத்காரம் செய்யப்பட்டதும், அதனை போலீஸார் மறைக்க முயன்றதும் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பச்சிளம் குழந்தையாக இருந்தாலும்சரி, வயதான பாட்டியாக இருந்தாலும்சரி, அவர் ஒரு "பெண்ணா"க மட்டுமே இருந்தால் போதும் என்ற கேவலமான மனநிலைமைக்கு ஆளாகிவிடுகிறார்கள் இதுபோன்ற காமுகர்கள்.. இந்த வெறிபிடித்த மிருகங்களுக்கு வயதோ, உறவுமுறையோ, எதுவுமே கண்ணுக்கு தெரிவதில்லை.
தண்டனைகள்: போக்சோ சட்டங்கள் தற்போது நடைமுறையில் இருந்தாலும்கூட, போதுமான பலனை அது பெற்று தரவில்லை என்றே தெரிகிறது.. அதனால்தான், பாலியல் கொடுமைகள் இன்னமும் குறையாமலேயே உள்ளன.. அதனால், போக்சோவைவிட இன்னும் கொடுமையான சட்டங்களும், கடுமையான தண்டனைகளும் இங்கு உடனடி தேவையானதாக இருக்கிறது...!!












Click it and Unblock the Notifications