ராமநாதபுரம் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: ஓபிஎஸ்சுக்கு அடி.. வெற்றி கனியை எட்டிய நவாஸ் கனி
ராமநாதபுரம்: லோக் சபா தொகுதியில் இரண்டாது முறையாக களம் காண்ட திமுக கூட்டணியிலுள்ள முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனி, பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் களம் கண்டனர். தற்போது தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி ஐயூஎம்எல் கட்சியின் நவாஸ்கனி 161254 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக் கனியை எட்டினார்
ராமநாதபுரம் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் பா.ஜெயாபெருமாள், பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் சுயேட்சை சின்னமாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சந்திரபிரபா ஜெயபால் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகள், விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி தொகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆகியவை இணைந்து ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 1980ஆம் ஆண்டிலிருந்து இங்கு காங்கிரஸ் பாரம்பரியமாக போட்டியிட்டு வென்றது. அதற்குப் பிறகு அதிமுக திமுக இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. சில தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
ராமநாதபுரத்தை பொருத்தவரை சிறுபான்மையின வாக்குகள் அதிகமாக இருக்கிறது. மேலும் முக்குலத்தோர் வாக்குகளும் கணிசமாக இருப்பதால் அங்கு போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் விரும்பினார். தற்போதைய தேர்தலை பொருத்தவரை திமுக கூட்டணியில் இருக்கும் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனிக்கும் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டிடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே தான் போட்டி இருக்கிறது என்கின்றனர் ராமநாதபுரம் பகுதி வாசிகள்.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
கடந்த தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளரான நவாஸ் கனி, 4 லட்சத்து 69 ஆயிரத்து 943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன் 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 வாக்குகளை பெற்றிருந்தார்.அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரான ஆனந்த் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 86 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த புவனேஸ்வரி 46 ஆயிரத்து 385 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
நவாஸ்கனி( ஐயூஎம்எல்)- 4,69,943
நயினார் நாகேந்திரன்(பாஜக)- 3,42,821
ஆனந்த் (அமமுக)- 1,41,806
புவனேஷ்வரி(நாம் தமிழர் கட்சி)- 46,385
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
அன்வர் ராஜா(அதிமுக)-4,05,945
முகமது ஜலீல்(திமுக)- 2,86,621
குப்புராமு(பாஜக)- 1,71,082
சு. திருநாவுக்கரசர்(காங்கிரஸ்)- 62,160
2009ஆம் ஆண்டு லோக் சபா தேர்தல் முடிவுகள்:
ஜே. கே. ரித்தீஷ்(திமுக)-2,94,945
வி. சத்தியமூர்த்தி(அதிமுக)-2,25,030
சு. திருநாவுக்கரசர்(பாஜக)- 1,28,322
சிங்கை ஜின்னா(தேமுதிக)- 49,571
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் தகவல் படி ஐயூஎம்எல் கட்சியின் நவாஸ் கனி 161254 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 495014 வாக்குகளை பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக 333760 வாக்குகள் பெற்ற ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது இடத்தை பிடித்து தோல்வியடைந்தார். அதற்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் ஜெயப்பெருமாள் 96740 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் 94471 வாக்குகளும், பெற்றிருக்கிறார். இதன் மூலம் நவாஸ் கனி வெற்றிக் கனியை எட்டியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications