ராமநாதபுரம்: ஆன்லைன் ரம்மி கொடுக்கல் வாங்கல் தகராறில் கார் ஏற்றி ஒருவர் கொலை..11 பேர் பலத்த காயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள அம்மன் கோவில் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடியபோது இரு தரப்பினருக்கு இடையே பணம் கொடுப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கார் ஏற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதலில் காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் கிராமத்தில் இரு தரப்பினர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பணம் கொடுப்பது தொடர்பாக இரு தரப்பு இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின்போது பரமக்குடியை சேர்ந்த ராமநாதபிரபு என்பவர் மதுபோதையில் தனது காரை சாத்தையா என்பவர் மீது ஏற்றியதில் பலத்த காயமடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாத்தையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ராமநாதபிரபு மற்றும் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைச் சம்பவத்தால் அம்மன் கோவில் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications