ராமநாதபுரத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரரின் மனைவி.. குழந்தைகள் கண் முன்னே.. ஆடிப்போன மக்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர் விஜயகோபால் என்பவர் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆவார். விஜயகோபால் உத்தரகாண்ட் மாநிலத்தில் இப்போது பணியில் இருக்கிறார். இவரது மனைவி ஜெர்னி. ஜெர்னியின் வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி ஒரு கும்பல் புகுந்தது. அங்கு மகன், மகள் கண் முன்னே நடந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தையே ஆடிப்போக வைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் பிறந்தவர் 38 வயதாகும் விஜயகோபால். இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். விஜயகோபால் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பில் பணியாற்றி வருகிறார். இவரது அத்தை மகள் ஜெர்மினி சென்னையில் வசித்து வந்தார். இவருக்கு தற்போது 36 வயது ஆகிறது. ஜெர்மினிக்கு விஜயகோபாலுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நிவேதா பெத்தனாட்சி (14) என்ற மகளும், திஸ்வர் (10) என்ற மகனும் உள்ளனர். இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

விவாகரத்து வழக்கு
கன்னிராஜபுரத்தை அடுத்த வெட்டுக்காடு பகுதியில் விஜயகோபால் தன் மனைவி ஜெர்மின் பெயரில் நிலம் வாங்கி வீடு கட்டியிருக்கிறார்கள். அதில் தான் விஜயகோபால் தனது மனைவி ஜெர்மின் மற்றும் தனது குழந்தைகளும் வசித்து வருகிறார். இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் விஜயகோபாலுக்கும் ஜெர்மின் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடலாடி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். மகன், மகளுக்காக விஜயகோபால், மாதந்தோறும் பராமரிப்பு தொகை வழங்கி வந்ததாகவும், கடந்த 6 மாதமாக அந்த பணம் வழங்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
கையில் ஆயுதங்கள்
நேற்று முன்தினம் இரவு தனது பிள்ளைகளுடன் ஜெர்மின், வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி ஒரு கும்பல் திடீரென புகுந்தது. கையில் பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்தார்களாம். இதனால் ஜெர்மின் மற்றும் 2 குழந்தைகளும் அதிர்ச்சி அடைந்து அலறினர்.
கூலிப்படை
தொடர்ந்து முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறார்கள். கூலிப்படையினர் யாரோ ஏவியதன் அடிப்படையில் ஜெர்மினை கொன்றதாக சாயல்குடி போலீசார் சந்தேக்கிறார்கள். இதுதொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அவருடைய கணவர் விஜயகோபாலை போலீசார் விசாரித்தனர். அவர் தற்போது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருப்பதாக போலீசாரிடம் கூறி உள்ளார். அவர் வந்ததும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். மகன், மகள் கண்முன்னே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications