Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமநாதபுரத்தில் மனைவிக்கு இத்தனை நண்பர்களா? ரூ.17000 ஜீவனாம்சம் வேற.. ஆடிப்போன சாயல்குடி ராணுவ வீரர்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், பெற்ற பிள்ளைகள் கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார் 36 வயது பெண்.. இவரது கணவர் விஜயகோபால் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றுபவர்.. கடந்த மாதம் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகாத நிலையில், மீண்டும் சாயல்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. விஜயகோபால் மனைவிக்கு என்ன நடந்தது? முகத்தை மூடிக் கொண்டுவந்த 2 மர்மநபர்கள் யார்? இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

2 மாதங்களுக்கு முன்புகூட திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தில், ராணுவ வீரர் ராஜேஷ் என்பவரை, கூலிப்படை வைத்து கொன்றார் அவரது 32 வயது மனைவி சங்கீதா.. ராணுவ வீரராக காஷ்மீரில் பணிபுரிந்த ராஜேஷூக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

sayalgudi alimony

ராணுவ வீரர்கள் சந்தேகம்

விடுமுறையில் கடந்த மே மாதம் சொந்த ஊருக்கு வந்துள்ளார் ராஜேஷ்.. மே 13ம் தேதி, மனைவியிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்றவர், அதற்கு பிறகு சின்ன அய்யம்பாளையம் பகுதியில் விவசாய கிணற்றில்தான் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

ராஜேஷ் மதுபோதையில் கிணற்றில் விழுந்து விட்டதாக சொன்னார்கள்.. ஆனால், ராஜேஷின் அம்மா சாந்தி, கண்ணமங்கலம் போலீசில், மகனின் மரணம் குறித்து சந்தேகம் கிளப்பினார்.. இதுகுறித்து விசாரிக்க போலீஸ் முயல்வதற்குள், சங்கீதாவும், அவரது அம்மா இந்திராவும் தலைமறைவாகினர். அப்போதுதான் அவர்களை பிடித்து விசாரித்தபோது, கூலிப்படையால் சங்கீதா தன்னுடைய கணவரை கொலை செய்தது தெரியவந்தது..

பைக்கிலேயே சடலம்

ராஜேஷ் ராணுவத்தில் இருந்தபோது, சங்கீதாவின் நடத்தை மீது சந்தேகம் வந்துள்ளது.. இதுகுறித்து தம்பதிக்குள் தகராறும் வந்துள்ளது.. இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா, உறவினர்கள் உட்பட 8 பேரை வைத்து ராஜேஷை கொன்றதும், சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல், இரவெல்லாம் பைக்கிலேயே வைத்து திரிந்து கடைசியாக கிணற்றில் வீசியதும் அம்பலமாகி பெரும் பரபரப்பை உண்டுபண்ணி இருந்தது...

இதுபோலவே, மற்றொரு சம்பவம் ராமநாதபுரத்தில் தற்போது நடந்துள்ளது.. அங்குள்ள ராணுவ வீரர், தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டுள்ளார்.. தான் ராணுவத்தில் பணியில் இருக்கும்போது, தன்னுடைய மனைவி, பலருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்ததை அறிந்து ஆவேசமாகியிருக்கிறார். இறுதியில் இந்த சம்பவமும் கொலை வரை சென்றுள்ளது.

கருத்து வேறுபாடுகள்

சாயல்குடி அருகே நரிப்பையூர் வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகோபால். உத்தரகாண்ட்டில் எல்லை பாதுகாப்பு துணை ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.. இவரது மனைவி ஜெர்மின்.. 36 வயதாகிறது.. தூத்துக்குடி மணப்பாடையை சேர்ந்தவர்..

இவர்கள் 15 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது 14 வயதில் மகள், 10 வயதில் மகன் உள்ளனர். ஆனால், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வெடிக்கவும் 5 வருடங்களாகவே பிரிந்து வாழ்கிறார்கள்.

முகத்தை மூடி வந்த மர்மநபர்கள்

இந்நிலையில், கடந்த 17ம் தேதி ஜெர்மின், 2 மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 2 பேரும் முகத்தை துணியால் மூடி வந்து, ஜெர்மினியை கொன்றுள்ளனர்.. இதுகுறித்து ஜெர்மினின் பெற்றோர், மருமகன் விஜயகோபால் மீது சந்தேகம் தெரிவித்து, புகார் தந்தன் அடிப்படையில், விஜயகோபாலிடம் விசாரணையும் ஆரம்பமானது.

இதுகுறித்து விஜயகோபால் தன்னுடைய வாக்குமூலத்தில, "திருமணமாகி குழந்தை பிறந்த சில வருடத்திலேயே எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஜெர்மின் பெயரில் வீடு கட்டியதால், வீட்டை அபகரித்துக் கொண்டார். விவாகரத்தும் கேட்டு, மாதந்தோறும் தனக்கு ரூ.17,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று முதுகுளத்தூர் கோர்ட்டிலும் வழக்கும் தொடர்ந்தார்.

அப்பாவுக்கும் தொடர்பு?

அப்போதுதான், பலருடன் ஜெர்மின் தகாத உறவில் ஈடுபட்டிருந்தது எனக்கு தெரிய வந்தது. இது எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பெருத்த அவமானத்தை தந்துவிட்டதால்தான், கூலிப்படையை ஏவி கொன்றேன்" என்றார் விஜயகோபால்..

தற்போது விஜயகோபாலை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரது அப்பா வயணன் உள்ளிட்ட 4க்கும் மேற்பட்டோருக்கு இந்த கொலையில் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளதாம்.. எனவே அவர்களும் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+