100 அடி அருவியில் பாறைகளில் நின்று செல்ஃபி! கால் தவறி ஆர்ப்பரித்த நீரில் விழுந்த இளைஞரின் நிலை என்ன?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் அருவியில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்து அருவியில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

    Photo எடுக்கும் போது விபத்து... 100 அடி ஆழத்தில் விழுந்த இளைஞர் *Tamilnadu

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலசத்திரத்தை சேர்ந்தவர் நாகநாதசேதுபதி. அவருடைய மகன் அஜய் பாண்டியன் (28). இவர் திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராமநாதபுரம் சத்திரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (25), அஜய் பாண்டியனை பார்க்க மங்களம்கொம்பு பகுதிக்கு வந்திருந்தார்.

    ஆடி பெருக்கு

    ஆடி பெருக்கு

    இந்த நிலையில் நேற்று முன் தினம் ஆடி பெருக்கு அதாவது ஆடி 18-ஐ யொட்டி இவர்கள் 2 பேரும் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் புல்லாவெளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    அஜய் பாண்டியன்

    அஜய் பாண்டியன்

    இதை பார்த்த அஜய் பாண்டியன் இதை ரீல்ஸ் எடுக்க முடிவு செய்தார். இதற்காக அஜய் பாண்டியன் நீர் வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் நின்று போஸ் கொடுக்க அதை கல்யாண சுந்தரம் வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து ஒவ்வொரு பாறையாக இறங்கி கைகளை மேலே உயர்த்தி அஜய் போஸ் கொடுத்து வந்தார்.

    ஈரமான பாறை

    ஈரமான பாறை

    ஒரு கட்டத்தில் ஈரமான பாறையில் நின்றாக அப்போது ஒரு காலை இன்னொரு கால் மேல் லேசாக மடக்கி நின்றது போல் கைகளை தூக்கி போஸ் கொடுத்தார். உடனே அஜய் பாண்டியனால் பேலன்ஸ் செய்ய முடியாததால் பாறையில் இருந்து விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிக்குள் தவறி விழுந்தார்.

    வீடியோ எடுத்த நண்பர்

    வீடியோ எடுத்த நண்பர்

    வீடியோ எடுத்த நண்பர் பதறி அடித்துக் கொண்டு அய்யோ டேய் மச்சான் என அலறினார். பின்னர் உடனே ஊர் மக்களிடமும் போலீஸாரிடமும் நடந்தவற்றை கூறினார். அஜய் பாண்டியனின் நிலை என்னவானது என தெரியவில்லை. தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் திண்டுக்கல் மாவட்ட போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த நீர் வீழ்ச்சி கடல் மட்டத்தில் இருந்து பல நூறு அடிகள் உயரம் கொண்டதாகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+