Rameswaram: ராமேஸ்வரம் கடலின் ஒரு பக்கம் அலையே வராது! ஏன் தெரியுமா? கடல் சார்ந்த சுவாரஸ்யங்கள்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திற்கு போயிருக்கீங்களா? அப்ப அங்கு கடலுக்கு போகாம இருந்திருக்க மாட்டீங்க! அந்த கடற்கரையில் வடக்கு பகுதியில் கடல் அலைகளே இருக்காது. இதை கவனித்துள்ளீர்களா? இதற்கான காரணம் என்ன தெரியுமா?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது ராமேஸ்வரம். பாம்பன் தீவில் அமைந்துள்ள நகரம். இங்கிருந்து இலங்கையின் மன்னார் தீவுக்கு 50 கி.மீ தூரம்தான் உள்ளது. இலங்கையிலிருந்து சீதாதேவியை மீட்க ஸ்ரீராமர் இங்கிருந்து பாலம் அமைத்ததாக ஒரு ஐதீகம். இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இது புண்ணிய பூமியாகும்.
கடல் என்றாலே நினைவுக்கு வருவது ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கும் அலைகள்தான். ஆனால் இந்த கடற்கரையின் வடக்கு பகுதியின் அதாவது ராபர்ட் ஜலசந்தி பகுதியில் பார்த்தோமேயானால் கடல் அலைகளே இருக்காது. ஆனால் தெற்கு பகுதியான மன்னார் வளைகுடாவில் கடல் அலைகள் இருக்கும். இது ஏன் என்பது தெரியுமா. இதுதான் புவியியல். இது தமிழகத்தின் தனித்துவமான புவியியல் அம்சங்களில் ஒன்றாகும்.

ஆழமற்ற கடல்
பாக் பே (Palk Bay) என்பது ஆழமற்ற ஒரு கடல் (shallow sea) பகுதியாகும் (கடலில் குளம் இருந்தால் எப்படியிருக்கும் அது போல் அலையில்லாமல் இருக்கும்). இது சுமார் 15ஆயிரம் சதுர கிலோமீட்டர் தூரம் வரை பரவியுள்ளது. கிழக்கு இலங்கையும் மேற்கில் தமிழகமும் வடமேற்கில் காவிரி டெல்டாவும் வடகிழக்கு வங்காள விரிகுடாவும் (அதாவது பாக் ஜலசந்தி தொடங்கும் இடம்) , தெற்கே ராமேஸ்வரம் தீவும், ஆடம்ஸ் பாலமும் காணப்படுகிறது.

வங்காள விரிகுடா
பாக் பேயில் வங்காள விரிகுடாவின் தண்ணீர் பாக் ஜலசந்தி வழியாக நுழைகிறது. இது தெற்கே உள்ள மன்னார் வளைகுடாவை இணைகிறது. பாக் ஜலசந்தியிலிருந்து பால்க் பேவுக்கு காற்று நுழைவது கடினமாக இருக்கும். வடக்கு பாக் பேயில் காற்றால் சில அலைகள் இருக்கும். ஆனால் ராமேஸ்வரத்தின் தெற்கு பகுதியில் காற்றின் நிலையை பொருத்து சிறிய அலைகள் ஏற்படும்.

மன்னார் வளைகுடா
மன்னார் வளைகுடா பகுதியில் அதாவது ராமேஸ்வரத்தின் தெற்கு பகுதி திறந்த நிலையில் உள்ளது. இதனால் வளைகுடா காற்று அலை, வடக்கு நோக்கி பாய்ந்து சில நேரங்களில் ஆடம்ஸ் பாலம் வழியாக கூட கடந்து பாக் பேவுக்குள் நுழைகிறது. இவையெல்லாம் அலை மாறுபாடுகள் மூலம் விளக்கலாம். ராமேஸ்வரம் அருகே பால்க் பேவிலிருந்து ஆற்றுப் படிவுகள் மணல் திட்டுகளை உருவாக்குகின்றன.

தனித்துவம்
பாக் பே தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டது. தெற்கு பே பகுதியில் உள்ள கடல் சார்ந்த சுற்றுச்சூழல் வடக்கு பாக்குடன் மாறுபடுகிறது. வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளிலிருந்து நீரோட்டங்கள் பாக் பேவுக்கு ஆற்று படிவுகளை அடித்துச் செல்கிறது. இதனால் மணல் திட்டுக்களுடன் ஆழமற்ற கடல் உருவாகிறது. இந்தியாவில் உள்ள 5 வண்டல் படிவங்களில் பாக் பேவும் ஒன்றாகும்.

வண்டல் படிவம்
வண்டல் படிவதற்கு முக்கிய காரணம் ஆற்று நீர் பாக் பேவுக்குள் நுழைவதும் ஆகும். இதனால் உப்புத்தன்மை குறைந்து காணப்படுகிறது. ஆழமற்ற கடல் அதிக அளவு சூரிய வெளிச்சத்தை கடல் பரப்பில் ஊடுருவ அனுமதிக்கிறது. இதனால்தான் கடலுக்கு தனி நிறத்தை கொடுக்கிறது. அலையும் இல்லாமல் இருக்கிறது. வண்டல் மண்ணுடன் கூடிய சூரிய ஒளியானது பவளப்பாறைகளுக்கும் கடற்புற்களுக்கும் உகந்ததாக அமைகிறது. (கடற்புல் என்பது கடலுக்கடியில் வாழும் ஒரு தாவரம். இவை சுற்றுச்சூழலை மாற்றக் கூடியவை) தண்ணீர் சுற்றுச்சூழல் அமைப்பில் தனித்துவத்தை உருவாக்குகிறது. இங்கு ஏராளமான உயிரினங்கள் வாழ முடிகிறது.

அதிக உயிர்
பே என்பது அதிக உயிர்களை உற்பத்தி செய்யும் சூற்றுச்சூழல் அமைப்பாகும். இங்கு 302 கடல் வாழ் ஆல்காக்களின் இனங்களும், 580 மீன் இனங்களும், 5 கடல் ஆமை இனங்களும் 11 கடல் புல் இனங்களும், மாங்குரோவின் பல இனங்களும் உள்ளது. இவற்றை நிலையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

மிகப் பெரிய மீன் பிடி பகுதி
இந்த பே தென்னிந்தியாவில் மிகப் பெரிய மீன் பிடி பகுதிகளில் ஒன்றாகும். கச்சத்தீவும் கடல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தீர்மானிக்கிறது. நவீன உபகரணங்களில் போதிய முதலீடு இல்லாமல் தவறான மீன்பிடி நடைமுறையானது சுற்றுச்சூழலை பாதிக்கிறது. வணிக முறை மீன் பிடித்தலுக்கு பயன்படும் மீன்பிடிக் கலன்களால் பாக் பகுதி சீரழிந்து வருகிறது. இவ்வாறு தமிழக புவியியல் துறையின் டிவிட்டரில் நீளமான ட்வீட்களில் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications