ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தர்ப்பணம் செய்ய கட்டண சீட்டு அறிவிப்பு வாபஸ்!
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தர்ப்பணம் செய்வதற்கான கட்டண அறிவிப்பு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ராமஸ்வரத்தில் ராமநாத ஸ்வாமி கோயில் உள்ளது. இது புண்ணிய தலம் என்பதால் இங்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்வது வழக்கம். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் குளித்துவிட்டு புண்ணிய நீராடல் செய்துவிட்டு 22 தீர்த்தங்களில் குளிக்க வேண்டும்.

இதுதான் இந்த கோயிலுக்கு செல்வதற்கான நடைமுறையாகும். இந்த கோயிலில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. இங்கு கொடுக்கப்படுவதால் காசியில் கொடுத்ததற்கான புண்ணியம் கிடைக்கிறது.
இதனால் காசிக்கு செல்ல முடியாத பலர் ராமேஸ்வரம் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்கிறார்கள். அதுபோல் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்கிறார்கள். இதனால் அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்தக் கடலில் கூட்டம் அதிகமாக இருக்கும். தர்ப்பணம், திதி செய்ய நிறைய புரோகிதர்கள் அந்த கோயிலைச் சுற்றி இருப்பதால் அந்த இடங்களிலும் கூட்டம் நிரம்பி இருக்கும்.
பொதுவாக வடஇந்தியர்கள் முதலில் காசியில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு பிறகு ராமேஸ்வரத்தில் கொடுக்க வேண்டும் என்றும் தென்னிந்தியர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு பிறகு காசிக்கு செல்ல வேண்டும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
இந்த நிலையில் ராமநாதசாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ராமநாதசாமி திருக்கோயில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சேபனை இருந்தால் பொது மக்கள் வரும் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தில தர்பணத்திற்கு 200 ரூபாயும், பிண்ட பூஜைக்கு 400 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்டப் பூஜை செய்ய கூட கோயில் நிர்வாகத்திற்கு பணம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
முன்னோர்களுக்கு நாம் காட்டும் பாசத்தின், மரியாதையின் வெளிப்பாடாக , மரித்தவர்களின் மறுமை வாழ்வுக்காக இறைவனை வேண்டி வைக்கப்படும் பிண்டத்திலும் பணம் பார்க்க வேண்டும் என்ற கார்ப்பரேட் மனப்பான்மை மூலம் இந்த திமுக அரசு ஒரு மிகத் தவறான முன்னுதாரணத்தை விதைப்பது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல.
இந்த முறையற்ற உத்தரவை உடனே திரும்பப் பெற்று, இறைவனுக்கான சேவையை முறைப்படுத்தவும், ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்பக்காண கட்டணங்களைத் தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்று திமுக அரசையும் முதல்வரையும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கட்டண நடைமுறையை கொண்டு வருவது தொடர்பான அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என்றும் ராமநாத ஸ்வாமி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications