கொத்தனார் மனைவி ஈஸ்வரி போட்ட மாஸ்டர் பிளானா? மோப்பம் பிடித்த ராமநாதபுரம் போலீஸ்.. பரிதாப கணவர்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இவருடன் சேர்த்து மேலும் 2 பேரை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்றொரு நபரையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த மாவட்டத்தில் பலருக்கும் அதிர்ச்சியை தந்துவருகிறது.
ராமநாதபுரம் அருகே கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வட மாநில இளைஞரை தேடி வருகின்றனர்.

பெண் குழந்தைகள்: ராமநாதபுரம் அருகே அழகன்குளம் சாமித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.. 45 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் கோட்டை ஈஸ்வரி.. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. ஈஸ்வரிக்கு இப்போது 41 வயதாகிறது..
லட்சுமணன் கொத்தனாராகவும், கோட்டை ஈஸ்வரி, ஆற்றங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் இறால் பண்ணையிலும் வேலை செய்து வருகிறார்கள்.. இந்நிலையில், இறால் பண்ணையில், பணிபுரியும் சக்திகுமார் பிஜி என்ற 31 வயது நபருடன் ஈஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. ஒடிசா மாநிலம் சோனைப்பூர் பகுதியை சேர்ந்தவர் இந்த சக்திகுமார் பிஜி.
நெருக்கம்: நாளுக்கு நாள் இவர்களது நெருக்கம் அதிகரித்ததையடுத்து, வீட்டிலுள்ள நகைகளை, சக்திகுமார் பிஜிக்கு ஒவ்வொன்றாக தர ஆரம்பித்துள்ளார் ஈஸ்வரி.. நகை மட்டுமல்லாமல், பணத்தையும் கடந்த சில மாதங்களாகவே தந்திருக்கிறார். வீட்டிலுள்ள நகை, பணம், ஒவ்வொன்றாக காணாமல் போவது குறித்து லட்சுமணக்கு சந்தேகம் எழுந்துள்ளது.. அப்போதுதான், மனைவியின் தவறான உறவும் தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கேட்டதற்கு, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கோட்டை ஈஸ்வரி, சக்திகுமார் பிஜியுடன் சேர்ந்து, கணவனை கொன்றுவிடுவது என்று முடிவெடுத்தார்.. இதற்காக தொண்டி பகுதியை சேர்ந்த பிரதீபன்(30), கவுதம் (34) ஆகிய 2 பேருக்கும் பணம் தந்து, லட்சுமணனை கொலை செய்ய சொன்னார்..
அதிரடி கைது: இதையடுத்து, திட்டமிட்டபடியே லட்சுமணனை கொல்ல அவர்களும் முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் இதுகுறித்து தேவிபட்டினம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துவிட்டது.. இதனால், விரைந்து வந்து, கோட்டை ஈஸ்வரி, பிரதீபன், கவுதம் ஆகிய 3 பேரையுமே கைது செய்தனர்.. ஆனால், வடமாநில இளைஞரான சக்திகுமார் பிஜி தலைமறைவாகிவிட்டாராம்.. அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications