ராமேஸ்வரம் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை.. மீனவர்களுக்கு பரிசு தர அரசு முடிவு
ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இன்று மீனவர்கள் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மீனவர்கள் வலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினமான சித்தாமை ஒன்று வாயில் இரும்பு தூண்டில் மாற்றியவாறு உயிருடன் சிக்கியது. அந்த கடல் ஆமையை உயிருடன் மீட்டு பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அரியவகை கடல்வாழ் உயிரினமான சித்தாமை (Olive Ridley Sea Turtle) உலகிலேயே மிகவும் சிறிய, மற்றும் அதிகம் காணப்படும் கடல் ஆமைகளில் ஒன்று. இது இந்தியப் பெருங்கடல், பசுபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. சித்தாமையின் ஸ்பெஷல் என்னெவென்றால் ஆயிரக்கணக்கான பெண் ஆமைகள் ஒரே நேரத்தில் கடற்கரையில் கூடி முட்டையிடும். இந்தியாவை பொறுத்தவரை ஒடிசா மாநிலத்தின் கஹிர்மாதா கடற்பகுதி உலகிலேயே சித்தாமைகள் முட்டையிடும் முக்கிய இடங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டிலும் இவை உள்ளன.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன், உச்சிப்புளி, சேராங்கோட்டை, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இன்று மீனவர்கள் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மீனவர்கள் வலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினமான சித்தாமை ஒன்று வாயில் இரும்பு தூண்டில் மாற்றியவாறு உயிருடன் சிக்கியது.
இதனை அறிந்த மீனவர்கள் வலையில் இருந்த பிற மீன்களை பிரித்து எடுத்து விட்டு வாயில் இரும்பு தூண்டிலுடன் உயிருடன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆமையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக கடலில் உயிருடன் பாதுகாப்பாக விட்டனர்.
ஆமையின் வாயில் சிக்கிய இரும்பு தூண்டில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக தூண்டிலில் மீனை மாட்டி கடலில் போட்ட போது அது ஆமையின் வாயில் சிக்கி நீண்ட நாட்களாக ஆமை அவதிப்பட்டு வந்திருக்காலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
கடலில் பாதுகாப்பாக விடப்பட்டதை அப்பகுதி மீனவர்கள் வீடியோ எடுத்து 'மீன் பிடி வலைகளில் சிக்கும் ஆமைகளை மீண்டும் பத்திரமாக கடலில் விட வேண்டும்' என விழிப்புணர்வு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
இந்த வீடியோ தற்போது அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. தமிழக அரசின் வனத்துறை சார்பில் அழிவின் விளிம்பில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை பத்திரமாக மீட்டு கடலில் விடும் மீனவர்களுக்கு வழங்கும் பரிசுத் தொகையை மீனவர்களுக்கு வழங்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications