விடாமல் கேட்கும் பெற்றோர்கள்! பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் என்ன சொன்னார்?
ராமநாதபுரம் : தமிழகத்தில் குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு 'ப்ளூ' காய்ச்சல் அதிகமாகி வரும் நிலையில், குழந்தைளுக்கு காய்ச்சல் பரவல் தடுப்பு குறித்து சுகதாரத் துறையின் வழிகாட்டுதல் படி பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் வந்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தமிழகத்தில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக லண்டன் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் உள்ள கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இல்லம் தேடி கல்வி திட்டத்தால் குழந்தைகளின் கல்வித் திறன் அதிகரித்துள்ளது. எனவே இந்தத் திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் விதமாக உள்ளது. டியூஷனுக்கு கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் பெரும்பாலும் இந்த திட்டம் மூலமாக கல்வி பயின்று வருகின்றனர். இல்லம் தேடி கல்விதிட்டம் இந்தியாவின் முன்மாதிரியான திட்டமாக செயல்பட்டு வருகிறது.

விடுமுறை அவசியமில்லை
மூன்று நாட்கள் மட்டுமே குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் இருக்கும் என்பதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை. கிராமப்பகுதிகளில் மாணவர்களுக்கு மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்ந்து காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் சுகாதாரத்துறை சார்பில் முகாம்கள் நடத்தப்படும் என நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழக முதல்வரின் அலுவலக மற்றும் சுகாதாரத் துறையுடன் கலந்தாலோசித்து பள்ளிக்கல்வித் துறை சுகாதாரத்துறை கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறோம்.

மாணவர் மனசு
அரசு பள்ளி ஆசிரியர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவதும் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிகளில் மாணவர் மனசு என்ற பெட்டி வைக்கப்பட்டுள்ள அந்த பெட்டியில்; மாணவர்கள் புகார் அளித்து வருகின்றனர். ஆனால் அதிலும் தீர்வு கிடைக்கவில்லை என நினைக்கும் மாணவர்களுக்காக 14417 என்ற இலவச எண் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்பு கொண்டு மாணவர்கள் புகார் அளிக்கலாம்.

மாணவர்களின் பாதுகாப்பு
மாணவர்களுக்கு ஏற்படும் மற்ற பிரச்சனைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்விதுறையை பொருத்தளவு கல்வி கற்று கொடுப்பது மட்டுமல்லாமல் மாணவர்களின் பாதுகாப்பில் முழு கவனத்தை செலுத்தி வருகிறது" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications