ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதத்திற்கு 144 தடை.. 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.. கலெக்டர் ஆர்டர்!
ராமநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 9) முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினம் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. அதேபோல சுதந்திர போராட்டத் தலைவர் முத்துராமலிங்க தேவர் அக்டோபர் 30ல் பிறந்து அக்டோபர் 30ல் மறைந்தவர். பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்டோபர் 30ஆம் தேதிஆண்டுதோறும் குருபூஜை நடந்தப்படுவது வழக்கம்.

இந்த இரு நாட்களிலும் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இவர்களது நினைவிடங்களுக்கு வருகை தந்து மரியாதை செலுத்துவார்கள். இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை நிகழ்வுகளில் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவர். இந்த சமயங்களில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11-ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அக்டோபர் 30ஆம் தேதி கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு நாளை (செப்.9) முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த உத்தரவால் மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் போராட்டங்களுக்கு முறையான அனுமதி பெற்று நடத்தலாம்.
மேலும் மாவட்டத்தில் நாளை முதல் (செப்.9) முதல் 15ஆம் தேதி வரையும், அக்.25 முதல் 31-ம் தேதி வரையும் வெளிமாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வாடகை வாகனங்களில் தலைவர்களின் நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு மரியாதை செலுத்த வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த டிஎஸ்பி அலுவலகங்களின் வாகன அனுமதி சீட்டு பெற்றுவர வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைத்துக் கொண்டோ, பேனர்கள் கட்டிக்கொண்டோ வரக்கூடாது. வழிகளில் பட்டாசுகள் வெடிக்கவோ மேற்கூரைகளில் பயணிக்கவோ அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோரின் வாகனங்களில் சாத, மத உணர்வை தூண்டும் வாசகங்கள் மற்றும் பதாகைகள் இடம்பெற்றிருக்கக் கூடாது, சாதி பெயருக்கான முழக்கங்கள் எழுப்ப கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் வரும் செப்டம்பர் 10, மற்றும் 11 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications