கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை வெறியாட்டம்- தமிழக மீனவர்கள் மீது சரமாரி கல்வீச்சு- 60 படகுகள் சேதம்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர்களின் 60க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன.
ராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 556 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் மீனவர்கள். கச்சத்தீவு அருகே பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 5 படகுகளில் அதிவேகமாக வந்தனர் இலங்கை கடற்படையினர். பின்னர் திடீரென படகுகளில் குவித்து வைத்திருந்த கற்களை எடுத்து சரமாரியாக தமிழக மீனவர்கள் மீது வீசித் தாக்குதல் நடத்தினர்.
இலங்கை கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் படகுகளுக்குள் பதுங்கி கொண்டனர். ஆனால் இடைவிடாமல் கல்வீசித் தாக்குதல் நடத்தினர் இலங்கை கடற்படையினர். இத்தாக்குதலில் 60 மீன்பிடி படகுகள் சேதமடைந்தன. மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் 25 மீன்பிடி வலைகளும் சேதப்படுத்தப்பட்டன.
இலங்கை கடற்படையினரின் இத்தாக்குதல் தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இலங்கை கடற்படை நடத்தும் இந்த அட்டூழியத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications