கொடுமை! கெட்ட வார்த்தையில் அசிங்கமா.. ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை.. என்ன நடந்தது?
ராமநாதபுரம்: மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மீனவர்களை தாக்கி விரட்டியடித்துவிட்டு மீன்களை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றதாக மீனவர்கள் குற்றம்சாட்டியதோடு, படகு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் நஷ்டத்துடன் கரை திரும்பி இருப்பதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படும். நடப்பாண்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த தடைக்காலம் மொத்தமாக 62 நாட்கள் அமலில் இருந்தது.

கடலுக்கு திரும்பிய மீனவர்கள்
இதனைத் தொடர்ந்து மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீனவர்கள் ஆயத்தமாகி வந்தனர். படகுகளை தயார் செய்து மராமத்து பணிகளை மேற்கொண்டனர். அதேபோல் மீன்பிடி உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்த நிலையில் ஜூன் 17ஆம் தேதி மீனவர்கள் பலரும் மீன்பிடிக்க உற்சாகமாக கடலுக்கு சென்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள்
பாம்பனில் இருந்து மட்டும் 91 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அதில் பெரும்பாலானோர் நேற்று திரும்பிய நிலையில், சராசரியாக ஒரு படகிற்கு ரூ.2 லட்சம் வரை விலை போனது. படகுக்கான எரிபொருள், உணவு, மீனவர்களுக்கான கூலி உட்பட ரூ.1.5 லட்சம் வரை செலவானாலும், இது திருப்தியான ஒன்று என்று மீனவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் புறப்பட்ட நிலையில், ஆழ்கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. மீனவர்களை தாக்கி விரட்டியடித்ததோடு, மீனவர்களிடம் இருந்த மீன்களையும் இலங்கை கடற்படை அள்ளி சென்றிருக்கிறது.
சோகமன மீனவர்கள்
இதனால் ஒரு படகுக்கு சுமார் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 2 மாதங்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து மீனவர்கள் பேசுகையில், நேற்று கடலுக்கு போயிருந்தோம். முதல் நாளே இலங்கை கடற்படை பிடித்துவிட்டது.
என்ன நடந்தது?
மீன், இறால், நண்டு எல்லாவற்றையும் அள்ளிச்சென்றுவிட்டார்கள். எங்கள் அனைவரும் முட்டி போட வைத்து மிரட்டினார்கள். டிரைவரை தனியாக அழைத்து சென்று அடித்தார்கள். மீனவர்களை எதுவும் செய்யவில்லை. பின்னர், எங்களை இந்தியா செல்லுங்கள்.. இந்தியா செல்லுங்கள் என்று கெட்ட வார்த்தையில் திட்டினார்கள். இதனால் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications