ராமநாதபுரம் கலெக்டருக்கு "தலைவலி".. டாஸ்மாக் இருக்கா? இல்லையா? தாத்தா சுப்ரமணிக்கு வந்துச்சே கோபம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு, டாஸ்மாக் கடை தொடர்பாக இரண்டு விதமான கோரிக்கைகள் வந்துள்ளன.. இது தொடர்பாக கலெக்டர் என்ன முடிவு எடுக்க போகிறார்? என்ற ஆர்வமும் எகிறி வருகிறது.
டாஸ்மாக் விவகாரங்களில் பரபரப்பை தந்துவிடும் மாவட்டங்களில் ஒன்று ராமநாதபுரம்.. அந்தவகையில், டாஸ்மாக் தொடர்பாக எத்தனையோ நிகழ்வுகள் இந்த மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன

டாஸ்மாக்: குறிப்பாக, தமிழகம் முழுவதுமுள்ள 5,329 கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பள்ளிகள், கோவில்கள், முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சில்லறை விற்பனையில் இருக்கும் 500 மதுபானக்கடைகளை மூடுவதற்கும் தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டு, அதன்படி நடவடிக்கையும் எடுத்திருந்தது.
அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 119 கடைகளில், பொதுமக்களுக்கு தொந்தரவாக இருந்த 8 மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டதையடுத்து, அந்தந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
புதுவயல்: அதேபோல, சில மாதங்களுக்கு முன்பு, திருவாடானை தாலுகா புது வயல் கிராமத்தில், மற்றொரு பரபரப்பு சம்பவம் நடந்தது.. இங்குள்ள அண்ணாநகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.. இந்த பகுதியில், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளுக்கு பக்கத்திலேயே டாஸ்மாக் திறக்கப்போவதாக தகவல் வெளியானது. இதைக்கேள்விப்பட்டதுமே, அப்பகுதி மக்கள் கலெக்டரை சந்தித்து மனு வழங்கியிருந்தனர். ஆனாலும் சம்பந்தப்பட்ட இடத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த மக்கள் மாபெரும் போராட்டத்தையே நடத்தியிருந்தனர்.
காலில் விழுந்து கேட்டோம்: "எங்க ஊருக்கு சாராயக்கடை வேண்டாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் காலில் விழுந்து புகார் அளித்திருந்தோம். ஆனாலும், அரசு மதுபான கடை மண்டல மேலாளர் இதற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறி கடையை திறக்க வருகின்றனர்.. பெட்டி பெட்டியாக சரக்கு வந்து இறங்குகிறது" என்று கொந்தளித்திருந்தனர்.
இப்போது மீண்டும் ஒரு டாஸ்மாக் இதே ராமநாதபுரம் மாவட்டத்தில் முளைத்துள்ளது.. பனைக்குளம் அருகே நாடார்வலசை கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. பனைக்குளம் மற்றும் 10 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்களை சேர்ந்த மதுபிரியர்கள் இந்த கடைக்கு வந்துதான் மது அருந்துகிறாரகள். ஆனால், குடித்துவிட்டு, தகாத வார்த்தையால் பேசுவது, அரை நிர்வாணமாக படுத்திருப்பது போன்ற செயல்களினால், அந்த வழியில் செல்லும் பெண்கள் பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
மதுக்கடைகள்: எனவே, அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று நாடார்வலசையைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள், 2 வாரங்களுக்கு முன்பு ராமநாதபுரம் ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கூடாது என்று மனு தரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. முதியவர் சுப்பிரமணியன் என்பவர் தலைமையில் மொத்தம் 5 பேர் திரண்டு வந்து கலெக்டரிடம் இந்த மனுவை அளித்தனர்.
மதுப்பிரியர்கள்: இதுகுறித்து சுப்பிரமணியன் சொல்லும்போது "இந்த நாடார் வலசை டாஸ்மாக்கை நம்பிதான், 10-க்கும் மேற்பட்ட கிராம மதுப்பிரியர்கள் உள்ளனர். இந்த டாஸ்மாக்குக்கு செல்வதற்கு பஸ் வசதியும் எங்களுக்கு இருக்கிறது. அந்த கடையால் பொதுமக்கள் யாருக்கும் இடையூறும் இல்லை. இருந்தாலும் சிலர் மகளிர் அமைப்புகளை தூண்டிவிட்டு, மதுக்கடையை இடமாற்றம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
ஒருவேளை, அந்த டாஸ்மாக்கை இடமாற்றம் செய்தால், மதுபிரியர்கள் 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள பெருங்குளத்துக்குத்தான் போக வேண்டும்.. அங்கே போனால், சாதி பிரச்சினை, அடிதடி வந்துவிடும்.. அப்பறம் எங்கள் ஊர், மது பிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.. அத்துடன் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு, பாட்டில் விற்கும் நிலைமையும் வந்துவிடும்.
நாடார்வலசை: அதனால், நாடார்வலசை டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கூடாது. அப்படியே, எங்களது டாஸ்மாக் கடையை அகற்றினால், தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும்" என்று ஆவேசத்துடன் சொல்கிறார் தாத்தா சுப்பிரமணியம்.
ஆக, டாஸ்மாக்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஒருதரப்பும், இடமாற்றம் கூடாது என்று மற்றொரு தரப்பும் மனு தந்துள்ளதால், ராமநாதபுரம் கலெக்டர் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? என்ற ஆர்வம் எகிறி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications