ராமநாதபுரம் கடலில் அதென்ன உருவம்? பார்த்ததுமே மலைத்து நின்ற தொண்டி மீனவர்கள்.. கலெக்டர் செம பாராட்டு
ராமநாதரம்: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 7 பேரை, மாவட்ட கலெக்டர் நேரடியாகவே அழைத்து பாராட்டியிருக்கிறார்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? தொண்டியில் என்ன நடந்தது தெரியுமா?
கடற்பசுக்கள் - இது உலகின் மிகப்பெரிய தாவர வகை கடல் பாலூட்டிகளாகும்... கடற்புற்களையே இந்த கடல் பசுக்கள் உணவாக சாப்பிடும்.. அமைதியான சுபாவம் கொண்டவை. ஒரு கடல் பசு சுமார் 400 கிலோ வரை இருக்குமாம்.. அதன் நீளமும் 3 மீட்டர் கொண்டதாக இருக்கும். ஒரு நாளில் இந்த கடல் பசு, 45 கிலோ உணவை சாப்பிடக்கூடியவை.

ஒரு காலத்தில் இந்த கடல் பசுவை மீன் பிடிப்பவர்கள் பிடித்து விற்பனை செய்து வந்தார்களாம்.. அப்போது தமிழ் நாட்டில் சில மாவட்டங்களில் உள்ள மக்கள் மட்டும் தான், இதனை சாப்பிட்டுள்ளார்கள்.. மிகவும் ருசியாக இருக்குமாம்.
கொழுப்பு: இந்த கடல் பசுவின் தோலை படகு கட்டவும், செருப்புக்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பு, மனிதர்கள் சாப்பிடும் வெண்ணெய்க்கு நிகராக இருந்துள்ளது. இந்த கொழுப்பை விளக்குகளை எரிக்கவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். புகையும், வாசனையும் இல்லாமல், விளக்கு நின்று எரியுமாம்.
இதுபோன்ற காரணங்களினால்தான், கடல் பசுக்களுக்கு அதிக கிராக்கி இருந்திருக்கிறது. அதிகம் ஆழம் இல்லாத பகுதிகளில் வாழக்கூடியவை.. இவற்றின் எடை அதிகமாக இருப்பதால், வேகமாக நீந்தி செல்ல முடியாது.. அதனால்தான், அதிகமாக வேட்டையாடப்பட்டுள்ளன.
அரசு தடை: ஐரோப்பியர்களால்தான், கடல் பசுக்களின் இனங்களை அதிக அளவில் வேட்டையாடப்பட்டதாம். நாளடைவில் இந்த இந்த இனமே அழிந்துவிடும் என்பதால்தான், கடல் பசுவை வேட்டியாடுவதற்கு, அரசு தடை உத்தரவு பிறப்பித்துவிட்டது... கடல் பசு, கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் பிடிப்பதற்கு அரசு தடைவிதித்தது.
பெரும்பாலும், ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இந்த கடல் பசுக்கள் அதிகமாக காணப்படும்.. எனினும், ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடல் பசுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மீனவர்கள்: அரசு தடை உத்தரவு பிறப்பித்ததிலிருந்து யாருமே, கடல் பசுவை வேட்டையாடுவது இல்லை.. மீன்பிடிக்கும்போது, தப்பித்தவறி தெரியாமல், வலையில் சிக்கிவிட்டால், அதனை மறுபடியும் கடலிலேயே கொண்டுபோய் விட்டுவிடுவார்கள்.
இதுகுறித்து மீனவர்கள் சொல்லும்போது, "எங்கள் வலையில் கடல் பசுக்கள் சிக்கிவிடும்.. இதில் சிலசமயம் தாய் பசுக்களும் சிக்கிக் கொள்ளும்.. குட்டி கடல் பசுக்களும் சிக்கி கொள்ளும். எதுவாக இருந்தாலும், அவைகளை மீட்டு கடலில் பாதுகாப்பாக விட்டுவிடுவோம்.. இதனால் வலை சேதமடைகிறது. ஆனால், எங்களுடைய வலை சேதமானாலும் பரவாயில்லை என அவற்றை மீண்டும் கடலில் வலையை அறுத்து விட்டு விடுகிறோம்.
நஷ்டம்: இதனால், எங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசின் மீன்வளத்துறை இதைக் கவனத்தில் கொண்டு சேதமாகும் வலைகளுக்கு நஷ்ட ஈடு வழங்கி உதவ வேண்டும் என்று மீனவர்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதேபோல, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதே கோரிக்கையை விடுத்தனர்.. கடல் பசுக்களை போலவே, வலையில் சிக்கும் டால்பின், ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை மீண்டும் கடலில் விடும் மீனவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கி அவர்களை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கேட்டுக் கொண்டு வந்தனர். இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்று ஊக்கத்தொகை மீனவர்களுக்கு வழங்கி வருகிறது.
தொண்டி மீனவர்கள்: அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள், 2 படகுகளில் மீன்பிடிக்க போனார்கள்.. இரு படகுகளில் 2 கடற்பசுக்கள் சிக்கியிருக்கின்றன.. வலையில் சிக்கிய 2 கடற்பசுவையும் உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டுவிட்டனர்.. அந்தக் கடல் பசுக்கள், மீண்டும் கடலுக்குள் வேகமாக நீந்தி ஆழ்கடல் பகுதிக்கு சென்றுவிட்டதாம்.
இந்நிலையில், நம்புதாளை மீனவர்கள் முருகானந்தம், பூமாரி,கரன், நாகூர் பிச்சை, பரதன், பெரியசாமி, அடையாள வேலு ஆகியோரை கலெக்டர் சிம்ரன ஜித் சிங் காலோன் பாராட்டி சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார்.
கடல் பசுவை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காகவே, இந்தியாவிலேயே முதல்முறையாக கடல் பசு பாதுகாப்பகம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் கடலோர பகுதியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.. புதுக்கோட்டை மாவட்டம் கோடியக்கரை பகுதிகளில் இந்த கடல் பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications