தேவர் ஜெயந்தி.. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிப்பு
ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா வரும் அக்டோபர் 30ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எனவே தேவர் ஜெயந்திக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வந்து செல்லும் வரும் வெளிமாவட்ட வாகனங்களுக்கான வழித்தடம் அறிவிக்கப்பட்டள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தஞ்சாவூர் வாகனங்கள்
திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக செல்ல வேண்டும். இந்த மாவட்ட வாகனங்கள் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ராமநாதபுரம் வரக்கூடாது.

கடலூர் வாகனங்கள்
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட வாகனங்கள் திருச்சி, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியில் திரும்பி செல்ல வேண்டும்.

தருமபுரி கிருஷ்ணகிரி
கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக செல்ல வேண்டும்.

கன்னியாகுமரி வாகனங்கள்
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக செல்ல வேண்டும். அல்லது தூத்துக்குடி, சூரங்குடி, சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக செல்ல வேண்டும். விருதுநகர் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக செல்ல வேண்டும்.

மானாமதுரை வழியாக
சிவகங்கை மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்" இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications