ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆறா மீனை போல் உள்ள ஸ்டாலினின் செயலை சாணக்கியத்தனம் என்கிறார்கள்- டிடிவி தாக்கு

Google Oneindia Tamil News

பரமக்குடி: திமுக தலைவர் ஸ்டாலின் ஆறாமீனை போல் உள்ளார். ஆனால் இதை சாணக்கியத்தனம் என்கிறார்கள் என தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்தீபனூரில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரங்களை முதன்முதலாக பரமக்குடி தொகுதியில் தொடங்கினோம்.

டாஸ்மாக்கை உடனே நிறுத்தினால் குடிப்பவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே அதை படிப்படியாக குறைக்க வேண்டும். முல்லை பெரியாறு, காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழக மக்களின் நலனில் தேசிய கட்சிகள் அக்கறை செலுத்தவே இல்லை.

சாணக்கியத்தனம்

சாணக்கியத்தனம்

தமிழக மக்கள் விரும்பாத மீத்தேன், நியூட்ரினோ திட்டம் ,8 வழிச் சாலை திட்டம் போன்றவற்றை அரசு கொண்டு வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறாமீனை போல் உள்ளார். இதை சாணக்கியத்தனம் என்கிறார்கள்.

மக்கள்

மக்கள்

ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என கூறிவிட்டு மம்தா பானர்ஜியின் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மக்கள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சந்தேகம்

சந்தேகம்

கொடநாடு சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொலைக் குற்றம்சாட்டும்போது தன்னை விசாரிக்கட்டும் என அவர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரோ பயப்படுகிறார். அஞ்சுகிறார். இதனால் அவர் மீதான சந்தேகம் வலுக்கிறது.

பாஜக வாக்கு

பாஜக வாக்கு

உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இந்த விவகாரத்தை உச்சநீதிமன் மூத்த நீதிபதி மூலம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரைகளை கூறி பாஜக வாக்குகளை பெற நினைக்கிறது.

கூட்டணி

கூட்டணி

அவர்கள் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தே ஆக வேண்டும். நாங்கள் யாரும் அதிமுகவினர் வலியுறுத்துவது போல் மேல் முறையீடு செய்ய மாட்டோம். தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் யாரும் என்னிடம் பேசவில்லை என்றார் தினகரன்.

English summary
TTV Dinakaran criticises MK Stalin for not announcing PM candidate in Mamta Banerjee's rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X