மனைவி + கள்ளக்காதலன் + மகள்.. நடுராத்திரி அலறிய கணவன்.. விக்கித்த ராமநாதபுரம்
கணவனை மனைவி தீயிட்டு கொளுத்தி கொன்றுவிட்டார்
ராமநாதபுரம்: கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக, கணவனை மகளுடன் சேர்ந்து தீயிட்டு கொளுத்தி எரித்து விட்டார் மனைவி..!
ராமநாதபுரம் அருகே உள்ளது ஆர்.காவனூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் தம்பதி ரவி - பாக்கியம்.. இவர்களது மகள் பவித்ரா..
உச்சிப்புளியை சேர்ந்த மாப்பிள்ளைக்கு பெண்ணை மணம் முடித்து வைத்தனர்.. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடமாகிறது..

தகராறு
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து விட்டார் பவித்ரா.. அம்மா ஆர்.காவனூரில் உள்ள வீட்டிலேயே நிரந்தரமாக வந்து தங்கி விட்டார். இந்நிலையில், பவித்ராவுக்கு, முருகானந்தம் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.. அவர் இடையர் வலசை பகுதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.. முருகானந்தமும், பவித்ராவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போயுள்ளார்..

வார்னிங்
இந்த விஷயம், பவித்ராவின் அப்பாவுக்கு தெரியவந்துள்ளது.. அதனால், மகளை கண்டித்தார்.. அறிவுரை சொன்னார்.. இனி முருகானந்தம் இந்த வீட்டுப்பக்கம் வரக்கூடாது என்றம் வார்னிங் தந்தார்.. ஆனால், இது எதையுமே பவித்ரா காதில் வாங்கவில்லை.. தொடர்ந்து பவித்ரா - முருகானந்தம் உறவு நீடித்து வந்துள்ளது.. இதனால் அதிர்ந்து போன அப்பா, மனைவி பாக்கியத்தை திட்டி உள்ளார்.. மகளை ஏன் கண்டிக்கவில்லை என்று ஆத்திரமடைந்து தகராறு செய்துள்ளார்.

கொந்தளிப்பு
கள்ளக்காதலை தட்டிக் கேட்டதால், கொந்தளித்து போன தாயும், மகளும், அவரையே கொலை செய்ய திட்டம் தீட்டினர்.. இந்த கொலைக்கு முருகானந்தத்தின் உதவியையும் நாடினர்.. கடந்த மார்ச் 8-ம் தேதி இரவு 11 மணிக்கு தூங்கிக்கொண்டிருந்த ரவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, மனைவியும், மகளும் கொளுத்திவிட்டனர்.. இதனால், உடம்பெல்லாம் தீப்பிடித்து அலறி துடித்தார் ரவி.. அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, தீயை அணைக்க முயன்றனர்..

நெருப்பு
ஆனால், உடம்பெல்லாம் பற்றிக் கொண்டு நெருப்பு எரிந்ததால், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தந்தனர்.. அவர்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் ரவியை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... ஆனால் சிகிச்சை பலனின்றி ரவி இறந்துவிட்டார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரவியின் சகோதரர் முருகன், ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் தரவும், அவர்களும் அதன்பேரில் விசாரணையை துவக்கினர்..

விசாரணை
ரவியின் மனைவி, மகளிடம்தான் முதல் விசாரணையே நடந்தது.. ஆரம்பத்தில் நாடகம் போட்ட தாயும், மகளும், இறுதியில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டனர்.. இவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.. ஆனால், ஜெயிலுக்கு போனதுமே, தனக்கு உடம்பு சரியில்லை என்று பவித்ரா சொன்னதால், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறாராம்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications