கணவரை உதறிவிட்டு கள்ளக்காதலனுடன் அடிக்கடி மாயமாகும் பெண்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவரை திருமணம் செய்த பெண், கள்ளக்காதலனுடன் அடிக்கடி மாயமாகி வந்துள்ளார், அந்த பெண்ணின் 2 குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில் கூறுகையில், "நானும், மதுரையை சேர்ந்த பெண்ணும் காதலித்து 2019-ம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். இந்தநிலையில் என் மனைவிக்கு அஜித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளைடைவில் ஏற்பட்டது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவருடன் சென்று விட்டார்.

madurai high court love

இதுகுறித்த நாங்கள் புகாரின்பேரில் போலீசார், குழந்தைகளையும், மனைவியையும் மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர். இதனால் நாங்கள் சொந்த ஊருக்கு வந்து விட்டோம். ஆனாலும் அஜித், என் மனைவியை கட்டாயப்படுத்தி பேசி வந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்கள் குழந்தைகளுடன் மாயமாகி விட்டனர். அவர்களை கண்டுபிடித்து ஆஜர்படுத்தவும், எனது குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்கும் படியும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் நீதிபதிகள் முன்பாக போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரரின் மனைவியின் செயல்பாடுகள் கடும் அதிருப்தி அளிக்கின்றன. அவர் அடிக்கடி இதுபோல மனுதாரரை விட்டு விட்டு குழந்தைகளுடன் மாயமாகிவிடுகிறார். எனவே குழந்தைகளை மனுதாரரிடம் ஒப்படைப்பதுதான் பாதுகாப்பானது என்று கூறினார்.

இதை கேட்டதும், அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவரிடம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா, உங்களது செயல்பாடு சட்டவிரோதமானது. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டவராக நீங்கள் செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், சட்டப்படி குழந்தைகளை வளர்ப்பது யார் என்பதை கீழ்கோர்ட்டை அணுகி பரிகாரம் தேடிக் கொள்ளலாம். அதுவரை குழந்தைகளை அவர்களின் தந்தையான மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தி இந்த வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர். அதன்படி 2 குழந்தைகளும் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இதனால் அந்த பெண், நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதுபுரண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+