ஈரோடு கிழக்கில் அதிமுக தோல்வி.. காரணம் இதுதான்.. டிடிவி தினகரன் சொன்ன பாயிண்ட்..திரும்பும் ஈபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியடைந்தார்.
ராமநாதபுரம்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் அந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய பாயிண்டை கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏ முருகன். இவர் தற்போது ராமநாதபுரம் மாவட்ட அமமுக செயலாளராக உள்ளார். இவரது இல்ல திருமண விழாவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்றார்.
அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது பற்றியும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி டிடிவி தினகரன் கூறியதாவது:

இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தல் முடிவு என்பது எல்லாருக்கும் தெரிந்த முடிவு தான். தமிழ்நாட்டில் 1989 மதுரை கிழக்கு, மருங்காபுரி, 2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தான் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. நான் ஆர்கே நகர் தேர்தலில் சுயேச்சையாகவே வெற்றி பெற்றிருக்கிறேன். மற்றபடி அனைத்து இடைத்தேர்தல்களிலும் ஆளும்கட்சி தான் வெற்றி பெற்றுள்ளது.

கேள்விபடாத அளவுக்கு சர்வீஸ்
இடைத்தேர்தலின்போது ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டால் தொகுதிக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற எண்ணம் இயற்கையாகவே உள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கில் மக்கள் ஓட்டுபோட்டுள்ளனர். இடைத்தேர்தல்களில் இதுவரை கேள்விபடாத அளவுக்கு மக்களுக்கு திமுக அமைச்சர்கள், திமுகவினர் சர்வீஸ் செய்துள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கில் கிடைத்த வெற்றியும், வாக்கு வித்தியாசம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இது நாடாளுமன்ற தேர்தலிலோ அல்லது சட்டசபை தேர்தலிலோ பிரதிபலிக்காது.

இரட்டை இலை இல்லாமல் இருந்தால்...
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடன் இருந்தவர்கள் ஆவணம், ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமிரில் உள்ளனர். தற்போது உச்சநீதிமன்றம் இரட்டை இலை கொடுக்காமல் இருந்தால் இன்னும் அவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். திமுகவுக்கு இணையாக அதிமுகவினர் பொருட்செலவு, பணசெலவு செய்தாலும் கூட இந்த அளவு தான் வாக்கு பெற்றுள்ளனர். இரட்டை இலை இல்லாமல் இருந்திருந்தால் அதிமுகவின் நிலைமை என்பது இன்னும் மோசமாகி இருக்கும்.

வீரவசனம் பேசியும் பலனில்லை
ஜெயலலிதா 1989 தேர்தலில் சேவல் சின்னத்தில் நின்று 28 தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஈரோட்டில் 5 அல்லது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஆனால் இரட்டை இலை இல்லாமல் கூட நாங்கள் போட்டியிடுவோம் என எடப்பாடி பழனிச்சாமி வீரவசனம் பேசினார். இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை உச்சநீதிமன்றம் அவரிடம் திணித்தது. இருப்பினும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதற்கு ஒருசிலர் வேண்டுமானலும் தடையாக இருக்கலாம். அவர்களும் துடைத்தெறிக்கப்படுவார்கள்.

ஈபிஎஸ் தான் காரணம்
எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் தொடர் தோல்விக்கு காரணம். மத்திய அரசின் உதவியோடும், பணபலத்தோடும் அவர் தனது ஆட்சியை தக்கவைத்தார். ஒரு கட்சியில் துரோகம் இழைக்கப்பட்டதால் எம்ஜிஆர் கட்சியை துவங்கிய நிலையில் அதன்தலைவர் பதவியில் துரோகத்தின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்துள்ளார். இதற்கு காலம் நிச்சயம் நல்ல தீர்ப்பு தரும். 2,600(பொதுக்குழு உறுப்பினர்கள்) பேரை வசப்படுத்தி வைத்து கொண்டு தொண்டர்கள் பின்னால் உள்ளதாக மட்டும் கூறினால் உண்மையான தலைவராக இருக்க முடியாது. மேற்கு பகுதி அதிமுகவின் கோட்டை எனக்கூறிய எடப்பாடி பழனிச்சாமி தற்போது கோட்டை விட்டுள்ளார். 2021 தேர்தலை காட்டிலும் அவர் குறைந்த அளவில் ஓட்டு பெற்றுள்ளார்'' என விமர்சனம் செய்தார்.

இடைத்தேர்தலில் நடந்தது என்ன?
முன்னதாக நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகின. இதில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். பாஜக கூட்டணியோடு களமிறங்கிய அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் தோல்வியடைந்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications