ஈகோவை டச் பண்ணிட்டாங்க.. இன்று ராமேஸ்வரம் வரும் மோடியை.. சந்திக்க மறுக்கும் எடப்பாடி.. என்ன நடந்தது?
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பானில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தைத் திறந்த வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க இன்றி ராமேஸ்வரம் வருகிறார் மோடி. இவரை பிரமாண்டமாக வரவேற்க தமிழக பாஜக தலைவர்கள் பலரும் வரிசையில் இருக்கிறார்கள். ஆனால் இவரை சந்திக்க அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டாராம்.
ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை மிக்க பழைய பாலத்திற்கு பதிலாக இன்று புதிய பாலம் திறக்கப்பட உள்ளது. முந்தைய பாலம் போல இந்த பாலம் நடுவில் தூக்காது. மாறாக இது லிப்ட் போல இயங்கும். இதை "lift-span" என்று அழைப்பார்கள். இது 72.5 மீட்டர் தூரம் கொண்டது. பெரிய கப்பல்கள் செல்லும் வகையில் இந்த பாலம் திறக்கும். இந்த பாலம் அங்கே அமைக்கப்பட்டுவிட்டது. இதை செயல்படுத்தி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

2.05 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தை ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் ₹545 கோடி செலவில் கட்டி உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக பழைய பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
நிரந்தரமாக நிறுத்தம் - புதிய போக்குவரத்து தொடக்கம்
ரயில் போக்குவரத்திற்கான பாம்பன் தூக்கு பாலம் நிரந்தரமாக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இங்கே ஏற்கனவே பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காரணம் அருகில் இருக்கும் கட்டுமானத்திற்கு சிக்கல் வரக்கூடாது என்ற பாதுகாப்பு காரணத்திற்காக நிறுத்தப்பட்டது.
கடந்த 1913ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்த பாம்பன் தூக்கு பாலம் 109 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வந்தது. இடையில் அவ்வப்போது இது பழுது அடையும். ஆனாலும் தொடர்ந்து இயக்கப்படும். கடந்த 11 மாதங்களாக பழுது காரணமாக ரயில்கள் இங்கே அனுமதிக்கப்படவில்லை. தற்போது அருகில் கட்டுமானம் தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக பழைய பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. இதனால் மிகப்பெரிய சகாப்தம் அங்கே முடிவிற்கு வந்துள்ளது. இன்று முதல் புதிய சேவை தொடங்கப்பட உள்ளது.
மோடி வருகை
இந்த நிலையில்தான் ராமேஸ்வரம் பாம்பானில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தைத் திறந்த வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க இன்று ராமேஸ்வரம் வருகிறார் மோடி. இவரை பிரமாண்டமாக வரவேற்க தமிழக பாஜக தலைவர்கள் பலரும் வரிசையில் இருக்கிறார்கள்.
இவர்களில் யார் யாருக்கு அனுமதி கிடைக்கும் என்கிற ஃபைனல் லிஸ்ட் டெல்லியில் முடிவாகி இருக்கிறது. அண்ணாமலை உடபட தமிழக பாஜகவின் முன்னணி தலைவர்கள் பலருக்கும் அனுமதிக் கிடைத்துள்ளதாம். .இன்று 3-ந்தேதி தான் இந்த லிஸ்ட் ஃபைனலாகியிருக்கிறது. லிஸ்ட் தயாரிக்கப்பட்டு தகவலும் சென்றுவிட்டது.
தங்களுக்கு அனுமதி கிடைத்து விட வேண்டும் என்று பாஜகவின் தலைவர்கள் டெல்லியிலெடுத்த முயற்சி பலன் கிடைத்துள்ளது என்கின்றனர். இதற்கிடையே, மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் நேரம் கேட்டிருப்பதைப் போல, டி.டி.வி.தினகரன், சசிகலா மற்றும் பாஜகவின் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே நேரம் கேட்டுள்ளது. ஆனால் கடைசியில் எடப்பாடி இந்த சந்திப்பை நீக்கி உள்ளார். மோடியை சந்திக்க மறுத்துள்ளார்.
அதிமுகவின் செங்கோட்டையன் போன்றவர்களை டெல்லி தலைகள் அடுத்தடுத்து சந்திக்கின்றனர். இதனால் அதிமுக உடையும் அபாயம் கூட உள்ளது. இதை எடப்பாடி விரும்பவில்லை. இதன் காரணமாகவே தமிழ்நாடு வரும் மோடியை சந்திக்க எடப்பாடி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அனுமதிக்கும் பாஜக தலைவர்கள் வரிசையில், தோழமைக் கட்சிகளின் தலைவர்களையும் அனுமதிக்கலாமா? என்கிற யோசனையில் டெல்லி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எடப்பாடி, ஓபிஎஸ்சுக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இப்போதுவரை தோழமைக்கட்சிகளின் தலைவர்களுக்கு அனுமதி தகவல் கிடைக்கவில்லை என்கிறது பாஜக வட்டாரம் !!












Click it and Unblock the Notifications