நம்பி மடியில் படுத்தேனே பஞ்சவர்ணம்.. இப்படி பண்ணிட்டியே.. உயிர் ஊசலாடும் ராமசாமி!
கணவனை உணவில் விஷம் வைத்து கொல்ல முயன்ற பெண் கைதானார்
Recommended Video
ராமநாதபுரம்: கணவனை மடியில் படுக்க வைத்து.. விஷ சோறு ஊட்டி விட்டு.. கொல்ல முயன்றுள்ளார் மனைவி பஞ்சவர்ணம். விஷ சோறு சாப்பிட்ட கணவனின் உயிரோ இப்போது ஊசலாடி கொண்டிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தாவுக்காட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பஞ்சவர்ணம். கல்யாணம் ஆகி 18 வருஷங்கள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் நிறைய சண்டை வந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரையும் ராமசாமியின் தம்பி கணேசன், சமாதானம் செய்து, தங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே உள்ள இன்னொரு வீட்டில் இவர்களை தங்க வைத்தார்.

சாப்பாடு
ஆனால் அங்கேயும் 2 பேரும் சண்டை போட்டு கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பஞ்சவர்ணம், கணவனை சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்யவே முடிவு எடுத்துவிட்டார். இதற்காக தக்காளி சாதம் செய்து, முட்டை பொறித்து, ரசம் வைத்தார். அந்த சமையலில் எலி மருந்தை கலந்து விட்டார்.

தக்காளி சாதம்
சாப்பாட்டு நேரம் வந்ததும், ராமசாமியை மடியில் படுக்க வைத்து ஊட்டி விட்டுள்ளார். இனி நமக்குள் சண்டை வேணாம், உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தை என்று சொல்லியே ஊட்டிவிட்டுள்ளார். மனைவி மடியில் படுத்து கொண்டு, ராமசாமியும், தக்காளி சாதம், முட்டையை சாப்பிட்டுள்ளார்.

பஞ்சவர்ணம்
இதையடுத்து, கணேசனிடம் சென்ற பஞ்சவர்ணம், "விஷம் தந்துட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவார்" என்று சொல்லவும், அவர் பதறியடித்து கொண்டு, ராமசாமியை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்.

கைது
உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமசாமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மடியில் படுக்க வைத்து மர்டர் செய்ய முயன்ற மனைவியை தேவிப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications