பேசாத காதலி.. கெஞ்சியும் பலன் இல்லை.. செல்பி எடுத்து அனுப்பி விட்டு தூக்கில் தொங்கிய காதலன்
காதலி பேச மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம்: எவ்வளவோ கெஞ்சி பார்த்தாச்சு... பேசவே இல்லை.. அதனால் தூக்கு மாட்டிய செல்பியை காதலிக்கு அனுப்பிவிட்டு உயிரை மாய்த்து கொண்டார் காதலன்.
ராமநாதபுரம் மாவட்டம் குருவாடி அருகே அவத்தாண்டை பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி ராஜா. 24 வயதான ராஜா, தனியார் என்ஜினீயரிங் காலேஜில் எம்.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இவர் 4 வருஷமாக தனது சொந்தக்கார பெண் ஒருவரை லவ் செய்து வந்தார். அந்த பெண்ணும் ராஜாவை உயிருக்கு உயிராக விரும்பினார்.

மனவேதனையில் ராஜா
ஆனால் விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துவிட்டது. ஆனால் மகளை கண்டித்தனர். வீட்டுக்கு பயந்த அந்த பெண்ணும், கொஞ்ச நாளாக ராஜாவிடம் பேசவில்லை. இதனால் மனவேதனைப்பட்ட ராஜா எவ்வளவு முயற்சி எடுத்து அந்த பெண்ணிடம் பேச பார்த்தும் முடியவில்லை. இந்த வருத்தத்தினால் மற்றவர்களிடமும் பேசாமலேயே ஒதுங்கினார்.

வாழவே பிடிக்கல
இந்நிலையில், விளாத்திகுளத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு வந்தவர், கடந்த மாதம் 28-ம் தேதியிலிருந்து காணாமல் போய்விட்டார். பின்னர் திடீரென தன் அண்ணனுக்கு போன் செய்த ராஜா, "எனக்கு இந்த உலகத்தில் வாழவே பிடிக்கல, அதனால தற்கொலை செய்துக்க போறேன்" என்று சொல்லிவிட்டு போனையிம் கட் பண்ணிவிட்டார்.

செல்போன்
உடனே அவரது அண்ணன் இதுசம்பந்தமாக போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் ஒரு பக்கமும், சொந்தக்காரர்கள் ஒரு பக்கமும் ராஜாவை தேடினார்கள். அப்போது விளாத்திகுளம் அருகே கே.தங்கம்மாள்புரம் காட்டு பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பிணமாக தூக்கில் தொங்கிய ராஜாவை கண்டெடுத்தனர். அவரது பாக்கெட்டிலிருந்து ஒரு செல்போனை போலீசார் எடுத்தனர்.

அழுகிய உடல்
ராஜாவின் உடல் ரொம்பவும் அழுகி இருந்தது. பின்னர், அதனால் அந்த இடத்திலேயே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ராஜாவின் செல்போனில், தற்கொலை செய்யும் முன்பாக ஒரு செல்பி எடுத்திருக்கிறார். அதாவது அவர் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு கடைசியாக எடுத்த செல்பி அது. அதை காதலியின் தோழிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தன்னுடன் காதலி பேசாததால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

கதறி அழுதனர்
ஆனால் இப்படி கழுத்தில் தூக்கு போட்டு கொண்டு அனுப்பிய செல்பியை பார்த்து அந்த தோழி, ராஜா விளையாட்டுக்கு இப்படி செய்கிறார் என்று நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். அதனால்தான் இதை அவரும் யாரிடமும் சொல்லாமல் இதை விட்டுவிட்டிருக்கிறார். ராஜாவின் அழுகிய உடலை கண்டு, அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications