‛மெக்கா' மசூதியில் தற்கொலை முயற்சி.. மேலிருந்து கீழே குதித்த நபரை ‛கேட்ச்' பிடித்த சவுதி பாதுகாவலர்.. வீடியோ
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மசூதியின் மேல்புற கட்டத்தில் இருந்து ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த வேளையில் அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த பாதுகாவலர் அந்த நபரை ‛கேட்ச்'பிடித்து தரையில் விழாமல் தடுத்தார். இதில் 2 பேரும் காயமடைந்த நிலையில் அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா அமைந்துள்ளது. மெக்காவில் அல் ஹராம் மசூதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் மெக்கா அல் ஹராம் மசூதிக்கு சென்ற இஸ்லாமியர் ஒருவர் திடீரென்று தற்கொலைக்கு முயன்றார். வாழ்க்கையில் விரக்தியடைந்திருந்த அவர் மசூதியின் மேல்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
திடீரென்று அவர் மசூதியில் மேல் இருந்து கீழே குதித்தார். அப்போது மசூதியின் தரைளத்தில் சவுதி அரேபியாவின் பாதுகாவலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். மசூதியின் மேல்புறத்தில் இருந்து கீழே குதித்த நபர் அந்தரத்தில் பறந்து வருவதை பார்த்த பாதுகாவலர் உடனடியாக அவரை ‛கேட்ச்' பிடித்தார். மேலும் எடை தாங்க முடியாமல் உடனடியாக இருவரும் தரையில் விழுந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டனர். தற்கொலைக்கு முயன்றவர் மற்றும் காப்பாற்றிய பாதுகாவலர் ஆகியோர் காயமடைந்து இருந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதுகாவலர் சுதாரித்து கேட்ச் பிடித்ததால் தான் அந்த நபர் உயிர் பிழைத்தார். இல்லாவிட்டால் அந்த நபர் தரைதளத்தில் விழுந்து அடிப்பட்டு இறந்திருக்க கூட வாய்ப்புள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் பற்றி Emirate of the Makkah Region உறுதி செய்துள்ளது. இதுபற்றி அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛மேல்தளத்தில் இருந்து குதித்த நபரை கீழே விழாமல் மசூதியின் பாதுகாப்புக்கான சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்தவர் காப்பாற்றினார். இதில் அந்த பாதுகாவலர் காயமடைந்தார்'' என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி சவுதி உள்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛மெக்கா சிறப்பு பாதுகாப்பு படை வீரர் சிறப்பாக செயல்பட்டார். தற்போது இருவரும் காயமடைந்து மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். அனைத்து சட்ட நடைமுறைகளும் இந்த விவகாரத்தில் பின்பற்றப்படும்'' என்று கூறியுள்ளது.
இதுபற்றி அந்த மசூதியின் தலைமை இமான் அப்துர் ரஹ்மான் அஸ் சுடாயிஸ் கூறுகையில், ‛‛புனித ஸ்லத்தின் புனிதம் மதிக்கப்பட வேண்டும். யாத்ரீகர்கள் விதிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் வழிபாட்டில் மட்டுமே தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். ‛உங்கள் சொந்தக் கைகளால் உங்களையே அழிவில் தள்ளிக்கொள்ளாதீர்கள்' என்று குரானில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது'' என்று கூறியுள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications